For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன விளையாட விடாம தடுத்தாங்க..!! போராடினேன்.. ஜெயிச்சேன்..! கண்ணீர்விட்டு கதறிய அந்த நாயகன்

எட்ஜ்பாஸ்டன்: நண்பர்கள், பெற்றோர் ஊக்கமே எனது வெற்றிக்கு காரணம் என்று ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினார் ஸ்டீவ் ஸ்மித். அதன் பின்னர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 இன்னிங்சிலும் சதம் அடித்து குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய 251 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ஆஸி. வெற்றி

ஆஸி. வெற்றி

2001ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா பெற்ற வெற்றியாகும் இது. அதனால் அந்த அணியினரும், ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வெற்றியின் மிக முக்கிய காரணியாக அமைந்தது பேட்ஸ் மேன் ஸ்மித் 2 இன்னிங்சிலும் சதம் அடித்துதான். அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தடை விதிப்பு

தடை விதிப்பு

வெற்றி குறித்து ஸ்மித் கூறியதாவது: மீண்டும் ஆஷஸ் தொடரில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் விளையாட தடை விதிக்கப்பட்ட போது இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ரொம்ப ஹேப்பி

ரொம்ப ஹேப்பி

ஆனால் தற்போது மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக நான் ஆஷஸ் தொடரில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி. 2வது போட்டியில் சதம் அடித்த போது முதல் போட்டியில் சதமடித்த மகிழ்ச்சி இருந்தது.

ஊக்கம், வெற்றி தொடரும்

ஊக்கம், வெற்றி தொடரும்

18 மாதங்கள் விளையாட முடியாமல் தடையில் இருந்தபோது எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கத்தினால் தான் நான் மீண்டும் இழந்த இடத்தை அடைந்துள்ளேன். எனது வெற்றி தொடரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

Story first published: Tuesday, August 6, 2019, 17:46 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
I’m loving being back in team says Australia star player Steve smith.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X