Andre Russell : மைதானத்தில் பேட்டிங் பண்ணும் போது அதை மட்டும் பார்க்கவே மாட்டேன்… !! எதை சொல்றாரு?
பெங்களூரு: எந்த ஆட்டமாக இருந்தாலும் சரி... பேட்டிங் செய்யும் போது மட்டும் ஸ்கோர் போர்டை பார்க்கவே மாட்டேன் என்று ரசல் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 17வது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. அதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா.

கொல்கத்தா வெற்றி
பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர்.

ரசலின் அதிரடி
இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தா வெற்றி பெற முக்கிய காரணம் ரசலின் அதிரடியான பேட்டிங். மொத்தம் 13 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்களை அடித்தார்.

முடிவுடன் ஆடினேன்
பின்னர் இந்த போட்டி குறித்து ரசல் கூறியதாவது:இந்த போட்டியில் நான் களமிறங்கிய போதே ஒரு முடிவெடுத்தேன். என்னால் எவ்வளவு சிக்சர்களை அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் என்னால் 7 சிக்சர்களை அடிக்க முடிந்தது.

பார்க்க மாட்டேன்
நான் மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது ஸ்கோர் போர்டை எப்போதும் பார்ப்பதில்லை. ரன்களை விரைவாக குவிக்கிறேனா ? என்பதை மட்டும் பார்க்கிறேன். கொல்கத்தா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications