For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேர்ல்டு கப்புல கோட்டை விட்டுட்டேன்... ஆனா டிஎன்பில்லில் விட மாட்டேன்...!

சென்னை: உலக கோப்பையின் போது இந்திய அணியில் விளையாடிய அந்த அனுபவங்களை, டிஎன்பிஎல் தொடருக்கு பயன்படுத்துவேன் என்று விஜய் சங்கர் கூறியிருக்கிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டியை நடத்திய நாடான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. அப்போது அணியில் தவான், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

இருவரும் பின்னர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டனர். உலக கோப்பை தொடர் முடிந்துளள நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. அதற்கான அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

இந் நிலையில், காயம்பட்ட இருவரும் உலக கோப்பை தொடரில் தங்களுக்கு ஏற்பட்ட காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமர்ப்பித்து ள்ளனர். இருவருடைய அறிக்கை மீது திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள்.

பங்கேற்பதில் சந்தேகம்?

பங்கேற்பதில் சந்தேகம்?

டிஎன்பிஎல் தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் பெரு விரல் காயம் காரணமாக பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது. முழு உடல் தகுதி பெற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் உடனான போட்டியில் தேர்வு செய்யப் பட்டால் டிஎன்பிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாது.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

இந்நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இறுதிகட்ட ஆட்டங்களில் ஆட முடியும் என்று நம்புகிறேன்.

பெரிய வாய்ப்பு

பெரிய வாய்ப்பு

உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்தது மிகப்பெரிய வாய்ப்பு. அதை முடிந்தவரை நன்றாக பயன்படுத்தினேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திடீரென முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் எதிர்பாராத ஒன்று. இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

பகிர்ந்து கொள்வேன்

பகிர்ந்து கொள்வேன்

சீனியர் வீரர்களுடன் பழக கிடைத்த வாய்ப்பால் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வேன். டிஎன்பில்லில் சாதிப்பேன். அனுபவங்கள் நிச்சயம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.

Story first published: Friday, July 19, 2019, 14:45 [IST]
Other articles published on Jul 19, 2019
English summary
I will teach my world cup experience to juniors in tnpl says Vijay Shankar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X