For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நமக்கு நல்லபடியா நடந்துச்சு.. ஆஸ்திரேலியாவை வச்சு செஞ்சுருச்சு.. மழை! #AUSvBAN

லண்டன்: பெருமழையால் ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதால் வங்கதேசத்தை விட ஆஸ்திரேலியா அணிதான் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மிகப் பெரிய ஏமாற்றத்தை அந்த அணி சந்தித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது. ஆனால் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தை விட ஆஸ்திரேலியாதான் கடுமையான ஏமாற்றத்தை சந்தித்தது. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று மழையால் வங்கதேசத்தை வெல்ல முடியாமல் போய் விட்டதே என்ற ஏமாற்றம். 2வது வங்கதேசத்தை பழி தீர்க்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது.

கார்டிப்பில் வைத்துக் காய்ச்சிய வங்கதேசம்

கார்டிப்பில் வைத்துக் காய்ச்சிய வங்கதேசம்

12 ஆண்டுகளுக்கு முன்பு கார்டிப்பில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் மோதின. இதில் யாருமே எதிர்பாராத வகையில் வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவை அபாரமாக வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்தது.

ஒரே வெற்றி

ஒரே வெற்றி

இன்றளவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் பெற்றுள்ள ஒரே ஒரு நாள் போட்டி வெற்றி அதுதான். இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு இன்று வரை உள்ளூர ஏமாற்றம்தான். எந்த இங்கிலாந்தில் அவமானப்பட்டோமோ அதே இங்கிலாந்தில் வங்கதேசத்தை தவிடுபொடியாக்க காத்திருந்தது ஆஸ்திரேலியா.

மழை வந்து கெடுத்தது

இந்த வேகத்தில்தான் நேற்று லண்டனில் வங்கதேசத்தைச் சந்தித்தது ஆஸ்திரேலியா. ஆனால் மழை வந்து காரியத்தைக் கெடுத்து விட்டது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேசம் 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 95 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க் 4, சம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மழையால் பாதிப்பு

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது. தொடக்க வீரர் பின்ச் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், வந்த கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இலக்கை குறைத்தும்

மழை குறுக்கீடு காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 43 ஓவர்களில் 89 ரன்களாக குறைக்கப்பட்டது. ஆனால், இரு வீரர்களும் களமிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன் மீண்டும் தூரல் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தப்பிய இந்தியா.. நொந்து கொண்ட ஆஸ்திரேலியா

தப்பிய இந்தியா.. நொந்து கொண்ட ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை மழை வந்து பதம் பார்த்துக் கொண்டுள்ளது. இப்படித்தான் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் ஒரு வழியாக போட்டி நடந்து இந்தியாவும் அபார வெற்றி பெற்று விட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவை மழை வைத்து செய்து விட்டது.

Story first published: Tuesday, June 6, 2017, 12:37 [IST]
Other articles published on Jun 6, 2017
English summary
Australia suffered a big "heartbreak" after the match against Bangladesh abandoned in the ongoing ICC Champions Trophy 2017 at London's Oval.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X