For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.சி.சி.யின் மதிப்புமிக்க அணி அறிவிப்பு.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை.. கேப்டன் யார் தெரியுமா?

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்த டி20 உலககோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்தை புரட்டி எடுத்து ஆஸ்திரேலியா அட்டகாசமாக கோப்பையை வென்றுள்ளது.

 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா 6 ஓவர்களில் வெற்றி.. ராகுலின் அதிவேக அரைசதம்..ஸ்காட்லாந்தை பந்தாடிய இந்தியா..அரையிறுதிக்கு செல்லுமா

நியூசிலாந்து நிர்ணயித்த 173 என்னும் சவாலான இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து எட்டி பிடித்து அசத்தியது ஆஸ்திரேலியா. வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி மீண்டும் ஏமாற்றத்தை பரிசாக அளித்து சென்றுள்ளது.

 மிகவும் மதிப்புமிக்க அணி

மிகவும் மதிப்புமிக்க அணி

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களின் செய்லபாடுகளை வைத்து மிகவும் மதிப்புமிக்க அணி ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) உருவாக்கியுள்ளது. இந்த 12 பேர் கொண்ட அணிக்கு பாகிஸ்தானின் பாபர் அசாம் கேப்டனாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஐ.சி.சி.யின் மதிப்புமிக்க அணி விவரம் பின்வருமாறு:-

 பாபர் அசாம் கேப்டன்

பாபர் அசாம் கேப்டன்

1.பாபர் அசாம் (பாகிஸ்தான்), 2.டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), 3.ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), 4.சரித் அசலங்கா (இலங்கை), 5.ஐடன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா), 6.மொயீன் அலி (இங்கிலாந்து), 7.வனிந்து ஹசரங்கா(இலங்கை), 8.ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா), 9.ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), 10.டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), 11.நோட்டர்ஜ்( தென்னாப்பிரிக்கா) 12. ஷஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்)

இந்தியாவுக்கு இடமில்லை

இந்தியாவுக்கு இடமில்லை

ஐ.சி.சி.யின் இந்த மதிப்பு மிக்க அணியில் ஆஸ்திரேலியா வீரர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ளனர். பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளில் இருந்து தலா 2 பேர் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியின் சார்பில் ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஆனால் இந்த பட்டியலில் இந்திய அணி வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.

Recommended Video

T20 World Cup 2021: Pitch மீது சரமாரி புகார் ! தவிறவிட்டதா ICC ? - Sunil Gavaskar | Oneindia Tamil
மிட்செல் மார்சுக்கு இடமில்லையா?

மிட்செல் மார்சுக்கு இடமில்லையா?

செமி பைனலில் தோற்று பாகிஸ்தான் வெளியேறினாலும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 289 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். இதனால் ஐ.சி.சி இவர்களுக்கு கவுரவம் அளித்துள்ளது. இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 16 விக்கெட்கள் வீழ்த்தியதால் அவருக்கும் இடம் கிடைத்துள்ளது. ஆனால் பைனலில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 16, 2021, 0:27 [IST]
Other articles published on Nov 16, 2021
English summary
The International Cricket Council (ICC) has formed a highly valued squad for the T20 World Cup. Pakistan's Babur Assam is the captain of the 12-man squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X