அடபாவிங்களா.. ஐசிசியிடமே வேலையை காட்டிய மோசடி கும்பல்.. 15 கோடி ரூபாயை ஏமாந்தது அம்பலம்

மும்பை : ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் மோசடி கும்பலிடம் சிக்கி இந்திய ரூபாய் மதிப்பில் 15 கோடியை ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் நடைபெறும் மோசடிகளில் சாதாரண மக்கள் சிக்கி பார்த்திருப்போம். ஆனால், இங்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமே சிக்கி பணத்தை இழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், 2022ஆம் ஆண்டு நடைபெற்று இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகக்கோப்பையில் அஸ்வின் கேட்ட மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவுக்குரல்.. நிறைவேற்றுமா ஐசிசி! உலகக்கோப்பையில் அஸ்வின் கேட்ட மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா ஆதரவுக்குரல்.. நிறைவேற்றுமா ஐசிசி!

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

சமூக வலைத்தளத்தில், ஆன் லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்த போதே ஐசிசி, இவ்வளவு பெரிய தொகையை இழந்து உள்ளது. அதாவது, போலி இமெயில், போலி வங்கி கணக்கு, போலி இணையத்தள முகவரியை வைத்து, உண்மையான நபர்கள் அனுப்பவது போல் இந்த மோசடி கும்பல் செயல்பட்டு இருக்கிறது.

போலி பெயர்

போலி பெயர்

இதனை நம்பி ஐசிசியில் உள்ள அறிவாளிகளும் பணத்தை அனுப்பி தற்போது ஏமாந்து இருக்கிறார்கள். ஐசிசி தலைவர், வழக்கறிஞர்கள், விளம்பரத்தாரர்கள் போன்றவர்கள் பெயரில் மோசடி இணையத்தள முகவரி, வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

யாருக்கு தொடர்பு

யாருக்கு தொடர்பு

தற்போது இந்த வழக்கை அமெரிக்காவில் உள்ள FBI அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோசடியில், ஐசிசியின் பணி புரியும் நிர்வாகிகளுக்கும், தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எத்தனை முறை கொள்ளையடிக்கப்பட்டது போன்ற கருத்து இதுவரை வெளியாக வில்லை. இது போன்ற மோசடியை தவிர்க்க வேண்டும் என்றால், நா உண்மையான நபருக்கு தான் பணம் அனுப்புகிறோமா என்பதை அந் நபரிடமே கேட்டு தெரிந்து கொள்வது மூலம் மோசடி தவிர்க்கப்படும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC lost huge amount of money in online scam - fans shocked அடபாவிங்களா.. ஐசிசியிடமே வேலையை காட்டிய மோசடி கும்பல்.. 15 கோடி ரூபாயை ஏமாந்தது அம்பலம்
Story first published: Friday, January 20, 2023, 23:03 [IST]
Other articles published on Jan 20, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X