For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. ஆடவர் டி20 உலகக் கோப்பையும் தள்ளிப் போகுமாம்

பெர்த்: ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரும் கூட இந்த கொரோனாவைரஸால் தள்ளிப் போடப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலக கோப்பைப் போட்டிகள் நடந்து முடிந்தன.

Recommended Video

Men’s T20 World Cup 2020 likely to be postponed

அடுத்து ஆடவர் உலகக் கோப்பைப் போட்டிகள் இதே ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இத்தொடர் தள்ளிப் போடப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கொரோனாவைரஸ் தாக்கத்தால் விளையாட்டுத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கால்பந்து முதல் கிரிக்கெட் வரை எல்லாமே நாஸ்தியாகி விட்டது. எந்த போட்டியையும் நடத்த முடியவில்லை. எல்லா போட்டிகளும் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது.

ஆஸ்திரேலிய உலகக் கோப்பை

ஆஸ்திரேலிய உலகக் கோப்பை

இந்த நிலையில்தான் ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரும் தள்ளிப் போடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 18ம் தேதி இந்தத் தொடர் தொடங்குவதாக உள்ளது. 2016ம் ஆண்டு கடைசி டி20 ஆடவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய உலகக் கோப்பை

ஆஸ்திரேலிய உலகக் கோப்பை

இந்த நிலையில்தான் ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரும் தள்ளிப் போடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 18ம் தேதி இந்தத் தொடர் தொடங்குவதாக உள்ளது. 2016ம் ஆண்டு கடைசி டி20 ஆடவர் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அக்டோபரில் நடைபெறுமா?

அக்டோபரில் நடைபெறுமா?

இந்த நிலையில் அடுத்த தொடர் வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலையைப் பார்த்தால் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால் இந்தத் தொடரை 2022ம் ஆண்டுக்கு தள்ளிப் போட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காரணம் அடுத்த ஆண்டு போட்டியை நடத்த கால அட்டவணை சாதகமாக இல்லை என கூறப்படுகிறது.

மேலும் 2 ஆண்டு தள்ளிப் போகுமா

மேலும் 2 ஆண்டு தள்ளிப் போகுமா

எனவே 2022ம் ஆண்டுக்கு இது தள்ளிப் போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. வரும் டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா செல்ல உள்ளது. மேலும் அடுத்து பிக் பாஷ் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன. அதேபோல அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளும் உள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், போட்டித் தொடரை தள்ளிப் போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

நிர்வாகிகள் ஆலோசனை

நிர்வாகிகள் ஆலோசனை

இருப்பினும் எப்போது என்ற முடிவு எட்டப்படவில்லை. நிறைய தொடர்கள் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளன. எனவே அதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவும் 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. எனவே 2022ல் தற்போதைய தொடர் ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர். முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல தொடர்களும் தள்ளிப் போடப்பட்டு வருகின்றன.

அதோ கதியில் ஐபிஎல்

அதோ கதியில் ஐபிஎல்

நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டியும் ஒத்திப் போடப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடர் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் நடக்க வாய்ப்பில்லை. மேலும் அது சில மாதங்களுக்குத் தள்ளிப் போடப்படும் என்றே கூறப்படுகிறது. எனவே மொத்த கிரிக்கெட் துறையும் குழப்பமாகியுள்ளது. மொத்த விளையாட்டு உலகத்தையும் இந்த கொரோனாவைரஸ் சூறையாடி விட்டது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

Story first published: Tuesday, March 31, 2020, 14:12 [IST]
Other articles published on Mar 31, 2020
English summary
ICC may postpone Men’s T20 World Cup 2020 in Australia -Says sources
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X