For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க இஷ்டத்துக்கு எல்லாம் மாத்த முடியாது... இது உலக கோப்பை..!! ஞாபகம் வைச்சுக்குங்க கோலி..!!

Recommended Video

ICC Rejects kohli Request | கோலியின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

லண்டன்:எல்இடி பெயில்சை நீக்க வேண்டும் என்ற கோலி மற்றும் பின்ச் ஆகியோரின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருக்கிறது.

தற்போதைய உலகக் கோப்பை தொடரில், ஒரு வித்தியாசமான பிரச்சனையை பல அணியினரும், வீரர்களும் சந்தித்து வருகின்றனர். அதாவது... தொடரில் எல்இடி பெயில்ஸ் பயன்படுத்தப்பட்டு வரும் விவகாரம் அது. நடுவர்களுக்கான வேலையை எளிதாக்குவதால் பயன்படுகிறது.

இந்த பெயில்ஸ் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்... தற்போது தான் ஒரு புது பிரச்னை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் பந்து ஸ்டம்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை இப்படி தான் வீழ்த்தப் போறோம்.. திட்டத்தை கசிய விட்ட நியூசி. இந்திய அணியை இப்படி தான் வீழ்த்தப் போறோம்.. திட்டத்தை கசிய விட்ட நியூசி. "பர்த்டே பாய்"!

அவுட்டாகாமல் தப்பினார்

அவுட்டாகாமல் தப்பினார்

இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது, பும்ரா வீசிய பந்து, ஸ்டம்பில் தாக்கியது. பெயில்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாகாமல் தப்பினார். இதே போல, இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து, ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை.

கோலி கோரிக்கை

கோலி கோரிக்கை

இதனால் பந்துவீச்சாளர்களும் கேப்டன்களும், வீரர்களும் செமத்தியாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, எல்இடி பெயில்சை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

ஐசிசி நிராகரிப்பு

ஐசிசி நிராகரிப்பு

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஐசிசி முற்றிலும் நிராகரித்து இருக்கிறது. இது பற்றி ஐசிசி கூறியிருப்பதாவது: தற்போது உலகக் கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், எல்இ டி பெயில்சை மாற்றினால் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும்.

வயர்கள் உள்ளன

வயர்கள் உள்ளன

2015ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தே இந்த பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த நடைமுறையை மாற்ற முடியாது. 10 அணிகள் ஆடும் 48 ஆட்டங்களிலும் ஓரே கருவி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் ஸ்டம்புகளின் மீது 10 முறை பந்து பட்டும், பெயில்கள் கீழே விழவில்லை. ஏராளமான வயர்கள் பயன்படுத்தப்பட்டு, கனமாக உள்ளதால், விழுவதில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

Story first published: Wednesday, June 12, 2019, 14:42 [IST]
Other articles published on Jun 12, 2019
English summary
Icc rejects kohli and finch demanding of removing led bails.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X