சூதாட்டத்திற்கு நிகரான குற்றம் செய்துவிட்டார் கோஹ்லி.. கதறும் நியூசி. ஊடகங்கள்.. வெடித்த சர்ச்சை!

Posted By:

டெல்லி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நியூசிலாந்து இந்திய அணியிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது.

தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி-20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஐசிசி விதிகளை மீறி வாக்கி டாக்கியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தற்போது மிகவும் பெரிதாகி சர்ச்சை ஆகி இருக்கிறது.

மேலும் விளையாட்டு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுப்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை கோஹ்லி மீறிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தற்போது நியூசிலாந்து ஊடங்கங்களில் மிகவும் பெரிதாகி இருக்கிறது.

 வாக்கி டாக்கி

வாக்கி டாக்கி

இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ரோஹித், தவான், கோஹ்லி அதிரடியால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து நியூசிலாந்து இந்திய அணியிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் பெவிலியனில் இருக்கும் போது கோஹ்லி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டு இருந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அவரை வாக்கி டாக்கியை தனது பக்கத்தில் வைத்து யாரோ ஒருவருடன் பேசுவதை போன்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைபபடம் வைரல் ஆகியது.

 ஐசிசி வகுத்துள்ள விதிமுறை

ஐசிசி வகுத்துள்ள விதிமுறை

ஐசிசி வகுத்து இருக்கும் விதிகளின் படி எந்த கிரிக்கெட் வீரரும் களத்திலோ, உடை மாற்றும் அறையிலோ தொலைபேசி கருவிகளை பயன்படுத்தக் கூடாது. இதன் படி உடைமாற்றும் அறைக்குள் போன் பேசுவதும், இணையத்தை பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுப்பதற்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு சூதாட்டத்திற்கு இணையான தண்டனை வழங்கப்படும்.

 ஐசிசி வரை சென்ற பிரச்சனை

ஐசிசி வரை சென்ற பிரச்சனை

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இந்த விதிகளை மீறிவிட்டதாக நியூசிலாந்து செய்தி நிறுவனங்கள் அவர் வாக்கி டாக்கியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. அதில் கோஹ்லி ஐசிசி விதிகளை மீறிவிட்டார். இது சூதாட்டத்திற்கு இணையான தவறு என அவர்களது செய்திகளில் எழுதி இருக்கிறது. அதையடுத்து இந்த விஷயம் இந்தியாவிலும் பெரிதானது. தற்போது இந்த சர்ச்சை ஐசிசி வரை சென்று இருக்கிறது.

 ஐசிசி விளக்கம்

ஐசிசி விளக்கம்

தற்போது இந்த சர்ச்சைக்கு ஐசிசி அமைப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ''கோஹ்லி வாக்கி டாக்கியை பயன்படுத்தி உடை மாற்றும் அறையில் இருக்கும் சக வீரர்களிடம் மட்டுமே பேசியிருக்கிறார். அதேபோல் வாக்கி டாக்கியை வைத்து ஆட்டத்தின் போது சிறிய அளவில் ஐடியா பரிமாற்றங்களை வீரர்களிடம் நிகழ்த்திக் கொள்ளலாம். இதில் எந்த தவறும் இல்லை. எனவே கோஹ்லி செய்தது குற்றம் கிடையாது'' என்று கூறியிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கிறது.

Story first published: Thursday, November 2, 2017, 17:18 [IST]
Other articles published on Nov 2, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற