For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியீடு.. அசுர வளர்ச்சி கண்ட அஸ்வின், மயங்க்.. வியப்பில் சீனியர் வீரர்கள்!

சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஸ்வின், மயங்க் அகர்வால் அசுர வளர்ச்சி கண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

இந்த தொடர் முடிந்து புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்ட அதே வேளையில் புதிய தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் மயங்க் அகர்வால் 11வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 150, 62 என ரன்களை குவித்த மயங்க் அகர்வால், தரவரிசையில் 41ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு வேகமாக உயர்ந்துள்ளார். இந்த பட்டியலில் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 5வது இடத்திலும் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கலக்கிய இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பௌலர் அஜாஸ் படேல் 62ஆவது இடத்தில் இருந்து 38ஆவது இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் வரிசை

ஆல்ரவுண்டர்கள் வரிசை

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 382 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 360 புள்ளிகளை பெற்று 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஏற்கனவே 2வது இடத்தில் இருந்த ஜடேஜா தற்போது 4வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

Recommended Video

Ashwin அபார சாதனை! Kumble, Harbhajan Record முறியடிக்கப்பட்டது | OneIndia Tamil
டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய புள்ளிப்பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 75 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியும், 58.32 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 8, 2021, 23:02 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
ICC Test Rankings are announced, Indian players Ashwin and mayank agarwal had a massive growth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X