For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்களை சும்மா விடக் கூடாதும்மா... வியர்க்க விறுவிறுக்க பயிற்சி பெறும் ஆஸி. வீராங்கனைகள்!

மெல்போர்ன்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு என்றாலே உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனம்தான்.. அதிலும் இந்த சிங்கப் பெண்கள் அணி இருக்கே.. சும்மா உலக அணிகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நாளைய இறுதிப் போட்டியிலும் இந்தியாவின் சுழல்தான் முக்கியமாக பேசப்படவுள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் டி 20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எல்லா வகையிலும் முடக்க ஆஸ்திரேலியா தீவிரமாக தயாராகி வருகிறதாம்.

இந்தியாவின் பூனம் யாதவ் மற்றும் ஸ்லோ ஸ்பின்னர்களின் வலையைத் தகர்த்து ரன் குவிக்க பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார்கள் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்.

 நாளைக்கு இருக்கு வேட்டை.. வெளுக்கக் காத்திருக்கும் ஷெபாலி.. சிக்ஸ் பறக்கும்.. கப்பும் கிடைக்கும்! நாளைக்கு இருக்கு வேட்டை.. வெளுக்கக் காத்திருக்கும் ஷெபாலி.. சிக்ஸ் பறக்கும்.. கப்பும் கிடைக்கும்!

ஆஸி. அணி தீவிர பயிற்சி

ஆஸி. அணி தீவிர பயிற்சி

ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் போட்டியில் பூனம் யாதவ் தனது சுழலால் மிரட்டி விட்டார். நான்கு விக்கெட்களைச் சாய்த்து 17 ரன் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார். இதனால் நாளைய போட்டியில் சுதாரிப்பாக ஆட கேப்டன் மெக் லேனிங் மும்முரமாக உள்ளார். இதற்காக தனது அணியினருடன் தீவிர பயிற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஸ்பின்னர்களால் ஆஸி. அச்சம்

ஸ்பின்னர்களால் ஆஸி. அச்சம்

பூனம் மட்டுமல்லாமல், ராஜேஸ்வரி கெய்க்வாட் கூட பயமுறுத்தக் கூடிய ஸ்பின்னர்தான். அருமையான ஸ்பின்னர்களுடன் இந்தியா வலிமையாக இருப்பது ஆஸ்திரேலியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. மேலும் ஸ்பின்னர்கள் சூழலுக்கேற்ப வேகத்தை கூட்டிக் குறைக்கும் வித்தையுடன் இருப்பதும் ஆஸ்திரேலியாவை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிரட்டும் துவக்க ஆட்டக்காரர்கள்

மிரட்டும் துவக்க ஆட்டக்காரர்கள்

எனவே ஸ்லோ ஸ்பின்னர்களை சமாளிக்கும் வகையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ஆஸ்திரேலியா. மேலும் இந்தியாவின் பேட்டிங் வரிசையும் பிரமாதமாக உள்ளது. ஷெபாலி, ஸ்மிருதி, தீப்தி சர்மா ஆகியோர் மிரட்டலாக உள்ளனர். அதிலும் ஷெபாலி பற்றி சொல்லவே வேண்டாம். மிரட்டுகிறார் அதிரடி பேட்டிங்கில். எனவே ஆஸ்திரேலியா தனது பந்து வீச்சாளர்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது.

வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலியா

வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலியா

நாளைய போட்டியில் இந்தியாவின் 5 முக்கிய வீராங்கனைகள்தான் முக்கியப் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதை மனதில் கொண்டு ஆஸ்திரேலியா பல உத்திகளை வகுத்து போட்டியை சந்திக்க தயாராகி வருகிறது. என்ன மாதிரியான உத்தி என்பதை ஆஸ்திரேலியா சொல்லவில்லை. ஆனாலும் இந்தியாவின் ஸ்பின்னர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் பீல்டிங் வியூகங்களை தகர்க்கும் திட்டத்துடன் ஆஸ்திரேலியா ரெடியாகி வருவது மட்டும் உறுதி.

Story first published: Saturday, March 7, 2020, 18:16 [IST]
Other articles published on Mar 7, 2020
English summary
Australia practising against slow spinners to tackle India's attack
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X