For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலககோப்பையில் சாதனை படைத்த வீராங்கனை.. தனி ஆளாக போராடிய ஹர்மன்பிரித்.. இந்தியாவுக்கு முதல் தோல்வி

ஹாமில்டன் : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 4 போட்டியில் வென்றது. இதனால் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை சூசி பேட்ஸ் 5 ரன்களில் ரன் அவுட் ஆகினார். சோபி டிபைன் 35 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடியஅமிலா கெர் அரைசதம் கடந்தார். பொறுப்புடன் விளையாடிய ஆமி செத்தர்வெயிட் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாதனை

சாதனை

நியூசிலாந்து வீராங்கனை கெதி மார்டின் விக்கெட்டை ஜூலன் கோஸ்வாமி வீழ்த்தியதன் மூலம் மகளிர் உலக கோப்பை விக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்தார். இந்திய வீராங்கனை பூஜா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 260 ரன்களை மட்டுமே எடுத்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 6 ரன்களிலும், தீப்தி சர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாண்திகா 28 ரன்கள் சேர்த்தார்.இதனையடுத்து சரிவிலிருந்த இந்திய அணியை மித்தாலி, ஹர்மன்பிரித் ஜோடி மீட்டது.

ஹர்மன்பிரித் அபாரம்

ஹர்மன்பிரித் அபாரம்

மித்தாலி 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்மன்பிரித் கவுர் தனி ஆளாக நின்று போராடினார். 63 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்த அவர், 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசினார். மற்ற வீராங்கனைகள் யாரும் துணை நிற்க தவறியதால் இந்திய மகளிர் அணி 198 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.

Story first published: Thursday, March 10, 2022, 17:02 [IST]
Other articles published on Mar 10, 2022
English summary
ICC Womens World cup NZ beat India by 62 Runs உலககோப்பையில் சாதனை படைத்த வீராங்கனை.. தனி ஆளாக போராடிய ஹர்மன்பிரித்.. இந்தியாவுக்கு முதல் தோல்வி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X