போதும்.. போட்டியை உடனே மாற்றுங்கள்.. ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்.. ஏன்?

WORLD CUP 2019 | ஐசிசியிடம் இங்கிலாந்திற்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஐசிசியிடம் புகார் அளித்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் மிகவும் மந்தமாக இருந்தது.

ஆனால் போக போக ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. முக்கியமாக இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் என்றால் உலகம் முழுக்க கோடிக்கணக்கில் மக்கள் போட்டிகளை கண்டுகளிக்கிறார்கள்.

அதிக வருமானம் ஈட்டும் வீரர்... போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர்..!!

நிலை என்ன

நிலை என்ன

தற்போது வரை நடந்துள்ள உலகக் கோப்பை போட்டியின் படி நியூசிலாந்து அணி மிகவும் வலுவாக இருக்கிறது. அதன்படி நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வென்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து அணி 3 போட்டியில் விளையாடி ஒன்றில் தோல்வி அடைந்து, இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்தியா என்ன

இந்தியா என்ன

இந்தியா மொத்தம் இரண்டு போட்டிகள்தான் விளையாடியது. இரண்டிலும் இந்தியா வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது . இதனால் இந்திய அணி மூன்றாம் இடம் வகிக்கிறது.

எங்கு இருக்கிறது

எங்கு இருக்கிறது

அதன்பின் ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளது. இனி வரும் போட்டிகள் இந்த அட்டவணையில் பெரிய மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு மழை தடையாக வந்துள்ளது.

மோசமான மழை

மோசமான மழை

தற்போது இங்கிலாந்தில் மழை பெய்து வருகிறது. இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் போட்டி மிக மோசமாக தடை பட்டு இருக்கிறது. இதுவரை மொத்தம் மூன்று போட்டிகள் உலகக் கோப்பையில் இந்த முறை மழையால் கைவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்

இதனால் இந்த முறை உலகக் கோப்பை போட்டியை உடனடியாக இங்கிலாந்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இனியும் போட்டிகளை நடத்த கூடாது. இதனால் உலகக் கோப்பையை பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. உடனே போட்டியை மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்று பலர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

எப்படி கோரிக்கை

எப்படி கோரிக்கை

அதன்படி இங்கிலாந்தில் போட்டி நடப்பது ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். வேறு ஏதாவது மழை இல்லாத அருகில் உள்ள நாடுகளுக்கு போட்டியை மாற்ற வேண்டும் என்று இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: Cricket fans get angry over England's bad rainy climate conditions.
Story first published: Wednesday, June 12, 2019, 16:00 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X