For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பல அவமானங்களை சந்தித்தார்.. உங்களின் ஈகோதான் பிரச்சனையே.. இந்திய அணியின் தோல்விக்கு திடுக் காரணம்!

இந்திய அணியின் தோல்விக்கு தேர்வு வாரியத்தின் ஈகோ பிரச்சனையும் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

Recommended Video

World Cup 2019 : இந்தியாவின் தோல்விக்கு காரணமான ஈகோ?.. யார் காரணம்?- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் தோல்விக்கு தேர்வு வாரியத்தின் ஈகோ பிரச்சனையும் காரணம் என்று தெரிய வந்துள்ளது. முக்கியமான வீரர் ஒருவரை அணியில் எடுத்து இருந்தால் இந்தியா இப்படி தோல்வி அடைந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இந்திய அணிக்கு பல வருடங்களாக பிரச்சனையாக இருந்து வரும் விஷயம் என்றால் அது மிடில் ஆர்டரில் யார் இறங்குவது என்பதுதான். யுவராஜ் சிங் அணியில் இருந்த வரை மிடில் ஆர்டரில் பெரிய பிரச்சனை இல்லை.

முதல் மூன்று வீரர்கள் மோசமாக சொதப்பினாலும் யுவராஜ் சிங் அதன்பின் அதிரடியாக ஆடி இருக்கிறார். 2011 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அவர் போன பின் இந்திய அணியில் நிறைய குழப்பங்கள் வந்தது. மிடில் ஆர்டரில் யார் இறங்க வேண்டும் என்று பெரிய பிரச்சனை நிலவியது. முக்கியமாக கடந்த இரண்டு வருடமாக மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்று தெரியாமல் இந்திய அணி பல சோதனை முயற்சிகளை செய்தது.

யாரும் இல்லை

யாரும் இல்லை

கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே தொடங்கி பண்ட் வரை இப்படி இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பலர் இறங்கி விளையாடினார்கள். ஆனால் இந்த சோதனை முயற்சிகள் எல்லாம் மோசமாக தோல்வி அடைந்தது.

ஒருவர் மட்டும்

ஒருவர் மட்டும்

ஆனால் இந்திய மிடில் ஆர்டரில் இறங்கி கொஞ்சம் ஒழுங்காக ஆடிய வீரர் என்றால் அது அம்பதி ராயுடு மட்டும்தான். மிடில் ஆர்டரில் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே ஆகியோரை விட அதிக ரன் ரேட் வைத்து இருப்பது அம்பதி ராயுடு மட்டும்தான். ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் உலகக் கோப்பை அணியில் எடுக்கவில்லை.

ஓய்வு பெற்றார்

ஓய்வு பெற்றார்

இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடாமல் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அம்பதி ராயுடு ஓய்வை அறிவிக்க முக்கிய காரணம் இருக்கிறது. இதற்கு பின் நிறைய அரசியல் காரணங்கள், அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் உலகக் கோப்பை அணியில் அம்பதி ராயுடு தேர்வாவதாக இருந்தது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இவருக்கு பதில் விஜய் சங்கர் தேர்வானார். இதற்கு விஜய் சங்கர் ஒரு 3டி வீரர், நன்றாக ஆடுவார் என்று தேர்வு வாரியம் பதில் சொன்னது. இதை அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்தார். நான் உலகக் கோப்பை போட்டியை 3டி கண்ணாடி அணிந்து கொண்டு பார்ப்பேன் என்று கிண்டல் செய்தார். இதுதான் பிசிசிஐ அமைப்பை சீண்டியது.

ஈகோ பிரச்சனை

ஈகோ பிரச்சனை

இதனால் ராயுடு - தேர்வு வாரியம் இடையே ஈகோ பிரச்சனை நிலவி வந்தது. பல முறை ராயுடு தேர்வு வாரியத்தால் அவமானத்திற்கு உள்ளானார். மேலும் அவரை அணியில் எடுக்கவே கூடாது என்று உறுதியுடன் இந்திய அணியின் தேர்வு வாரியம் செயல்பட்டது. இந்த ஈகோ பிரச்சனையால் கடந்த போட்டி வரை இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருந்தது.

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

ஒருவேளை இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து , மிடில் ஆர்டரில் இவர் இறங்கி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இருக்கலாம். ஜடேஜா அடித்தது போல இவர் அதிரடியாக ஆடி இருக்கலாம். ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இனிமேலாவது இந்திய அணி மிடில் ஆர்டரை வலிமைப்படுத்தும் என்று எதிர்பார்ப்போம்.

Story first published: Friday, July 12, 2019, 14:31 [IST]
Other articles published on Jul 12, 2019
English summary
ICC World Cup 2019: One unsolved issue became a major crisis for the team India during the series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X