For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்!

இந்த உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியின் மூத்த வீரர்கள் கோலியும் ரோஹித் சர்மாவும் இணைந்து சிறப்பான திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறார்கள்.

லண்டன்: இந்த உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணியின் மூத்த வீரர்கள் கோலியும் ரோஹித் சர்மாவும் இணைந்து சிறப்பான திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறார்கள். அவர்களின் திட்டம் அப்படியே ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக நிறைவேறி வருகிறது.

நான் என் வாழ்நாளில் மிக சிறந்த பார்மில் இருக்கிறேன். இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்கள் என்று கூட கூறுவேன், என்று ரோஹித் சர்மா நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சுக்கு பின் நிறைய உள் அர்த்தங்கள் இருக்கிறது.

ஆம் ரோஹித் சர்மாவின் இந்த பார்ம்தான் இந்திய அணிக்கு தினமும் வெற்றியை தேடி தந்து கொண்டு இருக்கிறது. அதற்கு பின் கோலியின் அசாத்திய தியாகம் ஒன்றும் இருக்கிறது.

நாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்நாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்

எப்படி இருக்கிறார்

எப்படி இருக்கிறார்

ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வருகிறார். முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ரோஹித் சர்மா 122 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 70 பந்திற்கு பொறுமையாக 57 ரன்கள் எடுத்தார். நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார்.

சிறப்பாக ஆடுகிறார்

சிறப்பாக ஆடுகிறார்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தொட வேண்டும் என்றால் மற்ற பவுலர்கள் ரோஹித் சர்மாவை தாண்டித்தான் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு ரோஹித் சர்மா மிகவும் வலுவாக இருக்கிறார். இதற்கு மத்தியில்தான் ரோஹித் சர்மாவும் கோலியும் உள்ளே வெளியே ஆட்டம் ஒன்று ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

கடந்த மூன்று போட்டியிலும் இந்திய கேப்டன் கோலி செஞ்சுரி அடிக்க முடியவில்லை. கோலி நன்றாக ஆடியும் அவரால் செஞ்சுரி அடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் முதலில் இறங்கும் ரோஹித் அதிக ஓவர்களில் விளையாடி விடுகிறார். இதனால் கோலிக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இந்திய அணியின் திட்டமே இதுதான் என்று கூறுகிறார்கள்.

சூப்பர்

சூப்பர்

அதன்படி பெரும்பாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் கோலி கேப்டன்சியில்தான் அதிகம் கவனம் செலுத்துவார். பேட்டிங்கில் ரோஹித்தான் கவனம் செலுத்துவார் என்கிறார்கள். அதனால்தான் கோலி பொறுமையாக ஆட வேண்டிய இடத்தில் கூட அணியின் ரன் ரேட்டை உயர்த்த ஆசைப்பட்டு அதிரடியாக ஆடி ரிஸ்க் எடுக்கிறார். ரோஹித், கோலி இருவரின் ஒரே குறிக்கோள் இந்திய அணியின் வெற்றிதான், தனிப்பட்ட சாதனைகள் அல்ல என்கிறார்கள்

 மங்காத்தா பிளான்

மங்காத்தா பிளான்

அதன்படிதான் கோலி, ரோஹித் இருவரும் தங்கள் ஈகோவை கூட மறந்து களத்தில் ஆலோசனைகள் செய்து போட்டியை மாற்றி அமைக்கிறார்கள். பீல்டிங், பவுலிங் ஆர்டருக்கு கூட இப்போதெல்லாம் இருவரும் நன்றாக ஆலோசனை செய்கிறார்கள். கோலி முன்பெல்லாம் இப்படி ரோஹித்திடம் அதிகம் ஆலோசனை கேட்க மாட்டார். அதேபோல் ரோஹித்திற்கு கோலி அதிகமான வாய்ப்புகளை அள்ளி வழங்கி தியாகம் செய்கிறார் என்கிறார்கள்.

செம பாஸ்

செம பாஸ்

முக்கியமாக கோலி தன்னுடைய ஆக்ரோஷத்தை குறைத்துக் கொண்டு ரொம்பவே அமைதி ஆகி இருக்கிறார் . இது இந்திய அணிக்குள் அழகான ஒற்றுமையை கொண்டு வந்துள்ளது. இதுதான் இந்திய அணியை எளிமையான வெற்றியை நோக்கி நகர்த்தி செல்கிறது. கோலி இல்லாத நேரங்களில் ரோஹித் எளிமையாக கேப்டன் செய்யவும் இந்த ஒற்றுமைதான் காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட சாதனைகளை ஓரம்கட்டிவிட்டு இரண்டு பேரும் இந்திய அணியின் வெற்றிகாக தீவிரமாக உழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Story first published: Monday, June 17, 2019, 13:58 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
ICC World Cup 2019: Rohit Sharma plan with Kohli works very well for victory of Team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X