For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர்.. இதுவரை ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததே இல்லை.. உலகக் கோப்பையில் நடக்க போகும் அதிசயம்!

ரோலர் கோஸ்டர் ரைடர் போல பல திருப்பங்களை சந்தித்த இந்த உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இன்னுமொரு அதிசய நிகழ்வு நடக்க போகிறது.

Recommended Video

World Cup 2019 : Final : Eng Vs Nz :உலக கோப்பையில் இதுவரை ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததே இல்லை-வீடியோ

லண்டன்: ரோலர் கோஸ்டர் ரைடர் போல பல திருப்பங்களை சந்தித்த இந்த உலகக் கோப்பை தொடரில் வரும் இறுதிப்போட்டியில் இன்னுமொரு அதிசய நிகழ்வு நடக்க போகிறது.

எங்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டும் என்று தெரியும். நாங்கள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும், மீண்டும் வருவோம். இந்த உலகக் கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

நாங்கள் இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் எப்படி ஆடுவோம் என்று தெரியும், என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்து இருந்தார். ஆம் அந்த அணி அப்போதே உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல தயாராகிவிட்டது.

தோனி ஆட மாட்டார்.. உலகக் கோப்பைக்கு பின் புதிய அதிர்ச்சி.. அடுத்த தொடரில் கிடையாது.. ஏன் தெரியுமா? தோனி ஆட மாட்டார்.. உலகக் கோப்பைக்கு பின் புதிய அதிர்ச்சி.. அடுத்த தொடரில் கிடையாது.. ஏன் தெரியுமா?

செம ரோலர்

செம ரோலர்

இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் ரோலர் கோஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் வெற்றியுடன் தொடங்கிய அந்த அணி போக போக தோல்வியை தழுவ ஆரம்பித்தது. இங்கிலாந்து அணியானது இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவியது.

மிக மோசம்

மிக மோசம்

வரிசையாக மூன்று தோல்விகளை தழுவியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இதனால் உலகக் கோப்பை செமி பைனலுக்கு செல்வதே அந்த அணிக்கு சந்தேகமாக இருந்தது. பாகிஸ்தானின் தொடர் தோல்வியால், கடைசி நேர இங்கிலாந்தின் பாய்ச்சலால் செமி பைனலுக்கு கஷ்டப்பட்டு வந்தது.

அப்போதுதான் பேட்டி

அப்போதுதான் பேட்டி

இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து இருந்த சமயத்தில்தான் இயான் மோர்கனும் ஜோ ரூட்டும் இங்கிலாந்து கண்டிப்பாக வெல்லும் என்று பேட்டி அளித்தார்கள். தற்போது அவர்கள் சொன்னது போலவே இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது. அதிரடியாக பைனலுக்கு சென்றுள்ளது.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியும் அப்படித்தான். இந்த தொடரை வெற்றிகரமாக தொடங்கினாலும், வரிசையாக மூன்று தோல்விகளை அந்த அணி சந்தித்தது. இது கடைசி நேரத்தில் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது . செமி பைனல் புள்ளி பட்டியலிலும் அந்த அணி கடைசி இடத்தில்தான் இருந்தது. ஆனால் உலகின் சிறந்த அணியான இந்தியாவை வீழ்த்தி அந்த அணியும் பைனல் சென்றுள்ளது.

ஏன் அப்படி

ஏன் அப்படி

இரண்டு அணிகளையும் எல்லோரும் குறைந்துதான் இந்த தொடரில் மதிப்பிட்டார்கள். ஆஸ்திரேலியா, இந்தியா பைனல் செல்லும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்து என்னவோ வேறு. இங்கிலாந்து, நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட்டது கூட அவர்களுக்கு பெரிய சாதகமாக மாறி இருக்க வாய்ப்புள்ளது.

யாரும் நினைக்கவில்லை

யாரும் நினைக்கவில்லை

இவர்கள் இருவரும் பைனலில் சந்திப்பார்கள் என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் தற்போது நடந்துள்ளது. இத்தனை வருடங்கள் ராஜா போல சுற்றிக்கொண்டு இருந்த ஆஸ்திரேலியாவும் இதனால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளது.

முதல் முறை

முதல் முறை

கடைசியில் அதிசயமாக.. இந்த உலகக் கோப்பை முதல்முறையாக ஒரு சாம்பியனை சந்திக்க போகிறது. ஆம் நியூசிலாந்து, இங்கிலாந்து இரண்டு அணிகளும் உலகக் கோப்பையில் இதற்கு முன் பைனலுக்கு சென்று இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வென்றது கிடையாது. இதனால் இந்த முறை புதிய ஒரு அணி கோப்பையை வெல்ல போகிறது.

Story first published: Friday, July 12, 2019, 12:43 [IST]
Other articles published on Jul 12, 2019
English summary
ICC World Cup 2019: This series will see the making of a new champion on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X