For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா ஜெயித்தால், செமி பைனலில் பாக்... தலையை பிய்ச்சுக்க வைக்கும் சோயப் அக்தர் கணக்கு

Recommended Video

தலையை பிய்ச்சுக்க வைக்கும் சோயப் அக்தர் கணக்கு

இஸ்லாமாபாத்: இங்கிலாந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு பாகிஸ்தான் செல்ல இந்தியா உதவும் என்று பாக். முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. முக்கிய அணிகளில் சில இன்னும் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றன. அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் தகுதி பெறும் என்பது இன்னும் முழுமை அடையவில்லை.

அனைத்து அணிகளின் கடைசி 3 அல்லது 2 போட்டிகளே அதனை நிர்ணயிக்கும் நிலை உருவாக்கும் என்று தெரிகிறது. முதல் அணியாக ஆஸ்திரேலியா பெற்றிருக்கிறது. 2வது அணியாக இந்தியா செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அந்த 2 அணிகள்

அந்த 2 அணிகள்

இந்த தொடரில் 2 அணிகளை ரசிகர்கள் உற்று பார்த்து வருகின்றனர். ஒன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து. மற்றொன்று பாகிஸ்தான். காரணம்...உலக கோப்பை தொடங்கும் முன்பு இந்த 2 அணிகளின் நிலையோ வேறு. இப்போதோ வேறு.

வெற்றியும், தோல்வியும்

வெற்றியும், தோல்வியும்

இந்த தொடருக்கு முன்பு வெற்றிகளை மட்டுமே குவித்த இங்கிலாந்து, தற்போது அரையிறுதிக்கு தகுதி அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் என்றால்.. இந்த தொடருக்கு முன்னர், கிடைத்த அணிகளை எல்லாம் அடித்து நொறுக்கியது இங்கிலாந்து. ஆனால்... அதனை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இலங்கை.

செமிபைனலில் எந்த அணி?

செமிபைனலில் எந்த அணி?

அதே போல தான் பாகிஸ்தானும்.தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அந்த அணி, நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு எந்த அணி முன்னேறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இங்கிலாந்தின் 2 தொடர் தோல்விகள், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை இடியாப்ப சிக்கலுக்குள் ஆட்படுத்தி இருக்கிறது.

எழுச்சி, வீழ்ச்சி

எழுச்சி, வீழ்ச்சி

பாகிஸ்தான் எழுச்சி, இங்கிலாந்தின் வீழ்ச்சி, வங்கதேசத்தின் எதிர்பாராத ஆட்டம் இந்த தொடரின் முக்கிய அம்சம் என்று கூறலாம். யாருக்கு அரையிறுதி என்று பாக். இங்கிலாந்து அணிகளின் வல்லுநர்கள் பேப்பரும் கையுமாக கணக்கிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் கைகளில்

இந்தியாவின் கைகளில்

இந் நிலையில், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இந்தியாவின் கைகளில் இருப்பதாக பாக். அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருக்கிறார். அவர் சொல்லும் கணக்கு கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தாலும்.. அதில் சொல்லும் காரணங்கள் சரி தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

தொடரில் அவுட்

தொடரில் அவுட்

அவர் கூறியிருப்பதாவது: இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அது போதும் எங்களுக்கு. தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிடும். அதன் பிறகு, பாகிஸ்தானுக்கு 2 போட்டிகள் இருக்கிறது.(ஒரு போட்டி இங்கிலாந்து, இந்திய அணிகள் போட்டிக்கு முன்னதாகவும், மற்றொரு போட்டி அதற்கு பின்னரும் இருக்கிறது)

பாக். அரையிறுதியில்

பாக். அரையிறுதியில்

அந்த 2 போட்டிகளில் வென்று 11 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு வந்துவிடும். அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை ஜெயிப்போம். ஒருவேளை இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்திடம் தோற்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார். பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று... மஞ்சு வாண்டுதான்...!!

Story first published: Friday, June 28, 2019, 11:47 [IST]
Other articles published on Jun 28, 2019
English summary
If india beat England we will enter in to semifinal says palistan former bowler shoaib akhtar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X