For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

12 நொடியில் கோல்.. கால்பந்து உலகை அதிர விட்ட பிளாக் பக்.. இந்தியா கொண்டாட மறந்த ஐ.எம்.விஜயன்!

திருச்சூர் : சர்வதேச கால்பந்து போட்டிகளில் மிக விரைவாக கோல் அடித்தவர்கள் பட்டியலை எடுத்தால் முதல் பத்து இடங்களில் இவர் பெயரும் இருக்கும்.
இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும் ஒரே இந்தியர் என இவரை அடையாளம் காட்டுவார்கள்.
அவர் தான் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஐஎம் விஜயன். இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரராக கோலோச்சியவர். ஆனால், இவரை நம்மில் பலருக்கும் தெரியாது என்பது தான் சோகம். அந்த இந்திய கால்பந்து ஹீரோவின் பிறந்த நாள் ஏப்ரல் 25. அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாமே!

Recommended Video

IM Vijayan Life story | IM Vijayan's 12 second goal
சோடா விற்ற விஜயன்

சோடா விற்ற விஜயன்

கேரளாவின் திருச்சூரில் வறுமைக்கு மத்தியில் வளர்ந்தார். சிறு வயதிலேயே சோடா விற்க வேண்டிய சூழல். அதையும் தாண்டி கால்பந்து மீது காதல். உள்ளூர் அளவில் கால்பந்து ஆடி வந்தவரை அடையாளம் கண்டார் அப்போதைய கேரள டிஜிபி எம்.கே.ஜோசப்.

இந்திய அணியில் வாய்ப்பு

இந்திய அணியில் வாய்ப்பு

காவல்துறை அணிக்கு ஆடியவர் அடுத்து பல கிளப்களில் இடம் பெற்றார். அவரது சிறப்பான ஆட்டத்தை அடுத்து இந்திய அணியில் 1989ஆம் ஆண்டு நுழைந்தார். அதே காலகட்டத்தில் இந்திய அணியில் மற்றொரு சிறந்த வீரர் இருந்தார். அவர் நாம் அனைவரும் அறிந்த, கேள்விப்பட்ட பாய்சங் பூட்டியா.

அசத்தல் ஜோடி

அசத்தல் ஜோடி

பாய்சங் பூட்டியா - ஐ.எம்.விஜயன் ஜோடி அப்போது எதிரணிகளை அச்சுறுத்தி வந்தது. 1999இல் நடந்த தெற்காசிய கால்பந்து தொடர் விஜயனின் கால்பந்து வாழ்வின் சிறந்த தொடராக அமைந்தது. அதில் தான் அந்த அபார சாதனையை செய்தார்.

12 நொடியில் கோல்

12 நொடியில் கோல்

அந்த தொடரில் முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து பூடான் அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டம் துவங்கிய 12வது நொடியில் கோல் அடித்து சாதனை செய்தார். அந்த தொடரில் மொத்தம் ஏழு கோல் அடித்தார் விஜயன்.

40 கோல்கள்

40 கோல்கள்

அவர் 79 போட்டிகளில் இந்திய அணிக்காக 40 கோல்கள் அடித்துள்ளார். 15 ஆண்டுகள் இந்திய கால்பந்து அணியில் ஆடிய விஜயன் 2003இல் ஓய்வு பெற்றார். அதன் பின் கிளப் அணிகளுக்காக ஆடி வந்தார். 338 கிளப் போட்டிகளில் ஆடி 250 கோல்கள் அடித்துள்ளார்.

நடிகர்!

நடிகர்!

2003இல் அர்ஜுனா விருது வென்றது தான் இவருக்கு கிடைத்த சிறந்த கௌரவம். ஓய்வுக்குப் பிறகு கால்பந்து பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் விற்கும் தொழில் என பயணித்த அவர் இருபதுக்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

பிகில் வில்லன்

பிகில் வில்லன்

அதிலும் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பிகில் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தார் விஜயன். ஒரு நடிகராக பலரால் அறியப்பட்டுள்ளார். ஆனால், ஐ.எம் விஜயன் இந்திய கால்பந்தின் ஹீரோவாக கொண்டாடப்பட வேண்டியவர்.

Story first published: Saturday, April 25, 2020, 19:10 [IST]
Other articles published on Apr 25, 2020
English summary
IM Vijayan - Indian football hero who hit a goal in 12 seconds. He also acted in Bigil movie as one of the villain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X