இம்ரான் தாஹிருக்கு தமிழ் கற்று கொடுப்பது யார் தெரியுமா கய்ஸ்!

By: Vishnupriya
இம்ரான் தாஹிருக்கு யார் தமிழ் கற்றுக்கொடுப்பது தெரியுமா ?- வீடியோ

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ள தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் தனக்கு தமிழ் கற்றுக் கொடுப்பது யார் என்பது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

சூதாட்டம் காரணமாக ஐபிஎல்லில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இதையடுத்து அந்த தடை காலம் தற்போது முடிவடைந்துவிட்டதை அடுத்து தமிழக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

அந்த வகையில் கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய இம்ரான் தாஹிர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவர் தென்னாப்பிரிக்க வீரர் ஆவார்.

டுவிட்டரில் தமிழ் ஆசான்

டுவிட்டரில் தமிழ் ஆசான்

சென்னையில் விளையாடவுள்ள இம்ரான் தாஹிர் தமிழ் கற்றுக் கொள்ள விரும்பியுள்ளார். இந்நிலையில் தனது தமிழ் வாத்தியார் இவர்தான் என்று டுவிட்டரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 சின்னாளப்பட்டி ரசிகர்

சின்னாளப்பட்டி ரசிகர்

இதுபோல் நம்ம இந்தியன் பிளேயர் ஹர்பஜன் சிங்கும் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் தமிழ் கற்றுக் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அண்மையில் சரவணன் போட்ட தமிழ் டுவீட்டை பஜ்ஜியும் டுவீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாஹிர் டுவீட்டுக்கு பிறகு

தமிழ் கற்றுக் கொள்வதாக தாஹிர் அனுப்பிய டுவீட்டை பார்க்கும் பஜ்ஜியின் முகம் இப்படிதான் வாடி விடும் என்று ஒரு மீம் வைரல் ஆகிவருகிறது.

Story first published: Saturday, February 10, 2018, 13:59 [IST]
Other articles published on Feb 10, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற