For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு முன்னாடி பும்ரா ஒரு பேபி பௌலர்..நானெல்லாம் இப்படி விளையாடினால்.. ரசாக் ரவுசு பேச்சு!

Recommended Video

I would have easily dominated Bumrah: Abdul Razzaq

கராச்சி : ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ஒரு பேபி பௌலர் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பௌலர்கள் க்ளென் மெக்கிராத், வசீம் அக்ரம் போன்றவர்களை எதிர்கொண்டு தான் ஆடியதால், தனக்கு முன்பு பும்ரா ஒரு பேபி பௌலர் என்றும் அவரை தான் எளிதாக வீழ்த்தியிருப்பேன் என்றும் ரசாக் கூறியுள்ளார்.

தற்போது பும்ரா சிறப்பாக விளையாடுகிறார் என்றும் முன்பை விட அதிகமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ள ரசாக், பந்துகளை முறையாக கையாள்வதால் அவர் முதலிடத்தில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

265 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட்டம்

265 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக், தன்னுடைய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 32 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்

தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ்

இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள 3 சர்வதேச டி20 போட்டிகள் ஐதராபாத்தில் நாளை துவங்கவுள்ளன. இதேபோல 15ம் தேதிமுதல் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.

 ஆலோசனைகளுடன் பில் சிம்மன்ஸ்

ஆலோசனைகளுடன் பில் சிம்மன்ஸ்

இந்த தொடரில் சதங்களை விளாசுவதில் இருந்து விராட்டை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை கோச் பில் சிம்மன்ஸ், அதற்கென நையாண்டியுடன் சில பல ஆலோசனைகளை தன்னுடைய அணியினருக்கு வழங்கியுள்ளார்.

"ஆடுவதற்கு முன்பே 100 ரன்கள் கொடுத்து விடலாம்"

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்றுனராக களமிறங்கியுள்ள பில் சிம்மன்ஸ், பேட்டை விடுத்து ஸ்டம்பை கொண்டு விராட்டை ஆட வைக்கலாம் என்று நையாண்டியுடன் பரிந்துரைத்துள்ளார். மேலும் விராட் ஆடுவதற்கு முன்பாகவே 100 ரன்களை கொடுத்து விட்டு மற்ற விரர்களுக்கு பௌலிங் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

"ஒரே நேரத்தில் இரு பௌலர்கள் பந்துவீச்சு"

விராட்டை கண்டு எதிரணி பௌலர்கள் அச்சமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சிம்மன்ஸ், அடுத்த அதிரடியாக ஒரே நேரத்தில் விராட்டிற்கு இரண்டு பௌலர்கள் பந்து வீசுவதன்மூலம் அவரை சீக்கிரத்திலேயே அவுட் ஆக்கிவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

"அதிக திறமையுடன் எதிர்கொள்ள வேண்டும்"

விராட்டை அவுட் ஆக்குவது கடினம் என்பதை ஒப்புக் கொண்டுள்ள பில் சிம்மன்ஸ், கடந்த ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுடன் மோதிய நிலையில், அதைவிட அதிக திறமையுடன் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

"இந்தியாவுடன் மோதுவது எளிதல்ல"

இந்தியா இந்தியா தான் என்றும், அதனுடன் மோதி ஜெயிப்பது எளிதானதல்ல என்றும் தெரிவித்துள்ள பில் சிம்மன்ஸ், கடந்த ஆண்டை காட்டிலும், இந்திய வீரர்களின் திறமை அதிகரித்துள்ளது போலவே, மேற்கிந்திய தீவுகள் அணியும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக திறமையுடன் மோத தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 5, 2019, 13:10 [IST]
Other articles published on Dec 5, 2019
English summary
Bumrah Is a Baby Bowler - Says Pakistan All-rounder Abdul Razzaq
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X