For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 தடவை நடந்திருக்கு… நேத்தும் இப்படி தான்.!! என்ன சொல்றதுன்னு தெரியல…!! அதிருப்தியில் கோலி

லண்டன்:உலக கோப்பை தொடரில் ஸ்டெம்பில் பந்து பட்டும், பெயில்ஸ் விழுவது இல்லை என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. ஒரு முறை, இரு முறை அல்ல... 5 முறை இதுபோன்று நடந்திருப்பது இதற்கு காரணம்.

உலக கோப்பை தொடர் தொடங்கி 12 நாட்கள் ஆகிவிட்டது. போட்டிகள், வெற்றிகள், தோல்விகள் என ஆட்டம் ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. ஆனால் போட்டிகளில் வீரர்கள் சொல்லும் சில புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது... வேகப்பந்து வீச்சாளர் பந்து ஸ்டம்பில் படுகிறது ஆனால் பைல்கள் விழுவதில்லை என்பது. நேற்றைய போட்டியிலும் இது நடந்தது தான் உச்சக்கட்டம்.

5 தடவை

5 தடவை

நேற்றைய சம்பவத்துடன், இது போன்று நடப்பது 5வது முறையாகும். நேற்று, இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய போட்டி. உலக கிரிக்கெட் ரசிகர்களால் முக்கியமாக பார்க்கப்பட்ட போட்டி. இதிலும் மேற்சொன்ன பெயில்ஸ் பிரச்னை தொடர்ந்தது தான் கொடுமையிலும், கொடுமை.

பும்ரா வீசிய பந்து

பும்ரா வீசிய பந்து

நேற்றைய ஆட்டத்தில், வார்னருக்கு பும்ரா பந்தில் ஸ்டம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழவில்லை. பும்ரா வீசிய பந்து, பேட்டின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பில் அடித்தது ஆனால் பெயில்ஸ் விழவில்லை. அந்த போட்டியில் வார்னர் அரைசதம் அடித்தார் ஆனாலும், ஆஸ்திரேலியா 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

லைட் எரியும் வசதி

லைட் எரியும் வசதி

பெயில்ஸ்களில் பந்து மோதினால் உடனடியாக லைட் எரியும் வகையில் வசதி செய்யப் பட்டிருக்கிறது. அதனால் கோலி ரிவியூ செய்தார். ஆனால்... அவுட் கொடுக்கப்படவில்லை. இது குறித்து கோலி கூறியதாவது: சர்வதேச அளவிலான ஒரு போட்டியில் இது போன்று தொடர்ந்து நடப்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

புரிந்து கொள்ள முடியவில்லை

புரிந்து கொள்ள முடியவில்லை

லைட் எரியும் வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டு இருப்பது உண்மையிலே நல்ல விஷயம். ஆனால் ஸ்டம்பை வேகமாக மோதினால்தான் பெயில்ஸ் விழும் என்றால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலிய போட்டியிலும் இது நடந்திருக்கிறது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

பெயில்ஸ் விழாதது ஆச்சரியமேற்படுத்துகிறது. காரணம் அந்த பந்தை வீசியவர் வேகப்பந்து வீச்சாளர். ஸ்டம்பும் தளர்வாகத்தான் இருந்தது. ஸ்டம்பில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.

பெயில்ஸ் விழுவதில்லை

பெயில்ஸ் விழுவதில்லை

நல்ல பந்தை வீசும் போது, பேட்ஸ்மேன் அவுட் ஆகிறார் ஆனால் அவுட் இல்லை. பந்து ஸ்டம்பை அடிக்கிறது. ஆனால்... லைட் எரிவது இல்லை, லைட் எரிகிறது.. பைல் விழவில்லை. இது போன்று அதிக முறை நடந்து நான் பார்த்ததில்லை என்று கூறினார்.

தொடரும் வலியுறுத்தல்

தொடரும் வலியுறுத்தல்

இதற்கு முன்னரும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிறிஸ் கெயில் பேட் செய்யும் போது, பந்து ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் கீழே விழவில்லை, அதே போல் இலங்கை வீரர் கருணரத்னே, தென் ஆப்ரிக்கா டி காக், வங்கதேசம் முகமது சைபுதின் ஆகியோருக்கும் இதே போல் நடந்தது. இதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

Story first published: Monday, June 10, 2019, 11:08 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
In world cup cricket 2019, bails don’t fall after hit for 5th time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X