For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்திரத்தை கையில் எடுத்த சீனியர் வீரர்கள்.. ஏமாந்த ஆஸி.. கடைசி நேர ட்விஸ்ட்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி எளிதாக அடக்க நினைத்து சறுக்கி உள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடைக்கும். குறைந்தது தொடரை சமன் செய்யும் வாய்ப்பாவது கிடைக்கும்.

எனவே, ஆஸ்திரேலிய அணி தீவிரமாக திட்டமிட்டு இந்த போட்டியில் ஆடி வருகிறது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. வில் புகோவ்ஸ்கி 62, லாபுஷாக்னே 91, ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 45 ஓவர்கள் ஆடியது. எப்படியும் டாப் ஆர்டரை வீழ்த்தி இந்திய அணியை இரண்டாம் நாளே நிலைகுலைய வைக்க திட்டமிட்டது ஆஸ்திரேலியா. ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை.

ஆஸ்திரேலியா எண்ணம்

ஆஸ்திரேலியா எண்ணம்

துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 26, ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 33வது ஓவரில் 85 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அப்போது சுமார் 13 முதல் 15 ஓவர்கள் வரை மீதமிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 2, 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைக்க திட்டமிட்டது.

திட்டம் வென்றது

திட்டம் வென்றது

ஆனால், அப்போது நிதானமாக ஆடி வந்த புஜாராவுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன் எடுப்பதை விட்டு விட்டு விக்கெட்டை இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தினர். அவர்கள் திட்டம் வென்றது. 45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 96 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது.

ரஹானே ஆச்சரியம்

ரஹானே ஆச்சரியம்

ரஹானே 40 பந்துகளில் 5 ரன்களும், புஜாரா 53 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கடைசி ஓவர்களை சந்திக்க இந்திய அணி நைட் வாட்ச்மேன் வீரர் யாரையாவது அனுப்பும் என எதிர்பார்த்த பலரும் ரஹானே வந்த போது ஆச்சரியம் அடைந்தனர் ஆனால், அவர் திட்டமிட்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

Story first published: Friday, January 8, 2021, 17:45 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
IND vs AUS : Ajinkya Rahane, Pujara saved their wickets on day 2
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X