இந்த டீமை வைச்சுகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. டோட்டல் வேஸ்ட்.. இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்!

சிட்னி : இந்திய அணித் தேர்வு மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டி இந்த அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியாது என விளாசி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் இல்லாததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக ரன் குவித்த போது புதிய பந்துவீச்சாளரை பந்து வீச வைக்க முடியவில்லை.

கட்டாயம்

கட்டாயம்

பும்ரா, நவ்தீப் சைனி, சாஹல் ஆகியோரது ஓவர்களை குறி வைத்து தாக்கியது ஆஸ்திரேலிய அணி. அப்போதும் அவர்களையே மீண்டும், மீண்டும் பந்து வீச வைக்க கட்டாயத்தில் இருந்தார் கேப்டன் கோலி. அதே போல, பேட்டிங்கிலும் ஒரே ஒரு ஆல்-ரவுண்டராக ஜடேஜா மட்டுமே இடம் பெற்று இருந்தார்.

ஆறாவது பவுலர் இல்லை

ஆறாவது பவுலர் இல்லை

இந்த நிலையில், இந்திய அணித் தேர்வு பற்றி பேசினார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன். அவர் கூறுகையில், இந்திய ஒருநாள் அணி கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர்களிடம் ஆறாவது பவுலர் இல்லை. அதே போல, பேட்டிங்கிலும் கூடுதல் வீரர்கள் இல்லை என்றார்.

உலகக்கோப்பை வெல்ல முடியாது

உலகக்கோப்பை வெல்ல முடியாது

உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. ஆனால், இந்த அணி வியூகத்தை வைத்துக் கொண்டு அவர்களால் உலகக்கோப்பை வெல்ல முடியாது. 7 பேட்ஸ்மேன்கள், 5 அல்லது 6 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தால் அவர்கள் பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Michael Vaughan questions Indian team formation and he says India can’t win world cup with this.
Story first published: Saturday, November 28, 2020, 19:28 [IST]
Other articles published on Nov 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X