For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன ஆட்டமா காட்டுறீங்க? வீரர்களுக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி.. கதறிய ஆஸி. வெளியான ரகசியம்!

மும்பை : சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியை சீண்டிக் கொண்டே இருந்தது ஆஸ்திரேலிய அணி.

ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய அணி, ஆஸ்திரேலியா செல்லும் முன்பே சீண்டலை துவங்கி இருக்கிறது.

எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க... வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்... டிராவிட் கலகல! எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க... வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்... டிராவிட் கலகல!

அப்போது களமிறங்கிய ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவுக்கு எப்படி பேசினால் புரியும் என எனக்கு தெரியும் என கூறி, இந்திய வீரர்கள் சார்பில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் உடனடியாக தன் முடிவை மாற்றி இருக்கிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

2020 ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், அங்கிருந்தே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதற்காக இந்திய அணி துபாயில் முகாமிட்டு இருந்த போது, ஆஸ்திரேலிய பயணத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன் வீரர்களின் குடும்பங்களுக்கு அனுமதி இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறி விட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறி இருக்கிறது.

அதிருப்தியில் வீரர்கள்

அதிருப்தியில் வீரர்கள்

முதலில் அனுமதி உண்டு என கூறிவிட்டு கடைசி நேரத்தில் மறுத்ததால் வீரர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஏழு இந்திய வீரர்கள் குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

ரவி சாஸ்திரி முடிவு

ரவி சாஸ்திரி முடிவு

ஆஸ்திரேலியா இந்திய வீரர்களை தொடருக்கு முன்பே சீண்டத் துவங்கி இருப்பதை புரிந்து கொண்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐயிடம் வீரர்கள் சார்பாக முடிவை கூறி இருக்கிறார். குடும்பத்துடன் அனுமதித்தால் ஆஸ்திரேலியா செல்கிறோம், இல்லையென்றால் போக முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

அலறிய ஆஸி.

அலறிய ஆஸி.

அதை பிசிசிஐ, ஆஸ்திரேலியாவிடம் கூற, அவர்கள் அலறி அடித்துக் கொண்டு அனுமதி பெற அரசை நாடி இருக்கிறார்கள். ஞாயிறு அன்று இதற்காக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.

Story first published: Sunday, January 24, 2021, 15:54 [IST]
Other articles published on Jan 24, 2021
English summary
IND vs AUS : Ravi Shastri forced Cricket Australia to allow families
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X