ஆஸி சரண்டர்.. கூட்டணி போட்டு காலி செய்த பும்ரா, நடராஜன், தாக்குர்.. இந்தியா வெற்றி!

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி.

மூன்றாவது போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மாற்றினார் கேப்டன் விராட் கோலி.

இது ஒரு குத்தமாய்யா? எவ்வளவு சர்ச்சைகள்.. விமர்சனங்கள்.. குழந்தை பிறப்புக்காக விடுப்பு எடுத்த கோலி

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியின் 7 விக்கெட்களை பும்ரா, நடராஜன், ஷர்துல் தாக்குர் கூட்டணி வீழ்த்தியது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தவான் நிதானமாக துவக்கம் அளித்து 27 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷுப்மன் கில் துவக்க வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கி 33 ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர்

ஸ்கோர்

ஸ்ரேயாஸ் ஐயர் 19, ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கோலி 63, ஹர்திக் பாண்டியா 92*, ஜடேஜா 66* ரன்கள் குவித்தனர். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பாண்டியா - ஜடேஜா ஜோடி 76 ரன்கள் குவித்தது.

நடராஜன் அபாரம்

நடராஜன் அபாரம்

தமிழக வீரர் நடராஜன் இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவர் தன் மூன்றாவது ஓவரை விக்கெட் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். மார்னஸ் லாபுஷாக்னே அவரது பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் கொடுத்து பவுல்டு அவுட் ஆனார்.

சரிந்த ஆஸி.

சரிந்த ஆஸி.

அதன் பின் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 7, ஹென்ரிக்ஸ் 22, கிரீன் 21, அலெக்ஸ் கேரி 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். தாக்குர் ஸ்மித் மற்றும் ஹென்ரிக்ஸ் விக்கெட்களை வீழ்த்தினார். துவக்க வீரர் ஆரோன் பின்ச் விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே 75 ரன்கள் சேர்த்தார்.

மேக்ஸ்வெல் மிரட்டல்

மேக்ஸ்வெல் மிரட்டல்

அடுத்து மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணியை மிரள வைத்தார். அவர் 38 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். அப்போது ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. எனினும், மேக்ஸ்வெல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஆஷ்டன் அகர் 28 ரன்கள் சேர்த்த நிலையில் நடராஜனிடம் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி கையில் ஒரு விக்கெட்டுடன் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. பும்ரா கடைசி ஓவரில் ஆடம் ஜாம்பா விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஒரு ரன் அவுட் செய்யப்பட்ட நிலையில், மற்ற 7 விக்கெட்களை வேகப் பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர். பும்ரா 2, நடராஜன் 2, ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அதன் காரணமாகவே இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Three pace bowlers beat Australia in third ODI
Story first published: Wednesday, December 2, 2020, 18:16 [IST]
Other articles published on Dec 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X