For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் கலக்கிய இங்கிலாந்து...போட்டியை இழந்த இந்தியா.. 4வது நாளின் டாப் 5!

பர்மிங்காம் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் விளையாட தொடங்கிய இந்திய அணி மேலும் 52 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

ind vs eng


இன்றைய போட்டியின் முக்கிய நிகழ்வுகள்


1. தினேஷ் கார்த்திக் விக்கெட்

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆண்டர்சன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இது மன ரீதியாக இங்கிலாந்து அணிக்கு ஒரு புத்துணர்வை கொடுத்தது மற்றும் இந்திய அணியின் நம்பிக்கையை சற்றே தளர்த்தியது.

2. ஸ்டோக்சின் அடுத்தடுத்த 2 விக்கெட்கள்

இரண்டாவது இன்னிங்சில் 46ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோஹ்லி மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அப்போதே நொறுங்கியது. அதே ஓவரின் கடைசி பந்தில் ஷமியும் அவுட் ஆனார். இந்த இன்னிங்சில் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

3. விராட் கோஹ்லியின் அரை சதம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் இரண்டாமிடம் பிடித்தார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 200 ரன்களை எடுத்தார். முதல் இடத்தில் பட்டோடி(212) உள்ளார்.

4. நம்பிக்கை அளித்த பாண்டியா

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா விராட் கோஹ்லிக்கு பிறகு சற்று அதிரடியாக ஆடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் இந்திய அணியின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

5. ஆட்டநாயகன் சாம் கர்ரன்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 20 வயதே ஆன இந்த இளம்புயல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு கடுமையான சவாலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இது அவரது இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.









Story first published: Saturday, August 4, 2018, 18:09 [IST]
Other articles published on Aug 4, 2018
English summary
England wins their 1000th Test Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X