இவங்க திருந்தவே மாட்டாங்க.. மீண்டும் வேலையைக் காட்டிய இந்திய வீரர்கள்!

கிறைஸ்ட்சர்ச் : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் சறுக்கியது.

INDvsNZ 2nd Test|இரண்டாவது போட்டியிலும் இந்தியா சொதப்பல்

கடைசி 6 விக்கெட்களை வெறும் 48 ரன்களுக்கு இழந்து ஏமாற்றம் அளித்தது இந்திய அணி.

ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகோய மூவரும் சரியாக அரைசதம் அடித்து தங்கள் விக்கெட்களை இழந்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 242 ரன்கள் எடுத்தது.

வெறும் 3 ரன் எடுத்து அவுட் ஆகிவிட்டு கோலி செய்த அந்த காரியம்.. கடுப்பில் கொந்தளித்த ரசிகர்கள்!

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்து 0 - 1 என தொடரின் பின்தங்கி உள்ளது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது.

ப்ரித்வி ஷா அதிரடி

ப்ரித்வி ஷா அதிரடி

நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டம் ஆட, ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். எனினும், மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ப்ரித்வி ஷா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

கேப்டன் விராட் கோலி முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். 3 ரன்களில் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அத்தோடு ஒரு ரிவ்யூவையும் வீணாக்கி விமர்சனத்துக்கு ஆளானார். துணை கேப்டன் ரஹானேவும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

புஜாரா - ஹனுமா விஹாரி அபாரம்

புஜாரா - ஹனுமா விஹாரி அபாரம்

அடுத்து புஜாரா - ஹனுமா விஹாரி இணைந்து அபாரமாக ஆடினர். விஹாரி வேகமாக ரன் குவித்தார். 10 ஃபோர் அடித்த அவர், 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 54 ரன்கள் எடுத்த நிலையில், எளிதான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

194 ரன்களுக்கு ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி, 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி 48 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து "நாங்க இன்னும் திருந்தலை" என உரக்கச் சொன்னது இந்திய அணி.

ஷமி இரண்டு சிக்ஸ்

ஷமி இரண்டு சிக்ஸ்

ஷமி கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸ் அடித்ததால் இந்திய அணி 250 ரன்களை நெருங்கியது. பும்ரா 10 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 12, ஜடேஜா 9, உமேஷ் யாதவ் 0 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நியூசிலாந்து ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இந்திய அணியை வீழ்த்தியது.

ஜேமிசன் 5 விக்கெட்

ஜேமிசன் 5 விக்கெட்

தன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் கைல் ஜேமிசன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். டிம் சவுதி 2, ட்ரென்ட் பவுல்ட் 2, நெய்ல் வாக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். பவுல்ட் ஓவருக்கு 5.23 ரன்கள் கொடுத்தது மட்டுமே மோசமாக அமைந்தது.

தொடர்ந்த தவறுகள்

தொடர்ந்த தவறுகள்

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் செய்த அதே தவறுகளை இந்த முறையும் தொடர்ந்தது. கோலி நேராக வந்த பந்தை அடிக்காமல் விட்டு, எல்பிடபுள்யூ ஆனார். புஜாரா அவுட்சைடு வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு மீண்டும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். விஹாரியும் பந்தை அடிக்க அவசரப்பட்டார்.

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

தொடர்ந்து இந்திய வீரர்கள் தவறான அணுகுமுறையை கையாளும் நிலையில், இந்திய அணியால் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs NZ Second test : India scored 242 runs in first innings
Story first published: Saturday, February 29, 2020, 12:32 [IST]
Other articles published on Feb 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X