பாறை திரும்பி வந்திடுச்சி.. இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரை கிண்டல் செய்த கோலி..!

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Jasprit Bumrah Injury: India Pacer Twists His Ankle While Bowling | Oneindia Tamil

இதில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த குறையை நிவர்த்தி செய்தனர்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் கே எல் ராகுலின் அபார சதத்தால் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

“2021-ன் சிறந்த டெஸ்ட் வீரர் விருது”.. தமிழக வீரர் இடம்பிடித்து அசத்தல்.. வியப்பில் அண்டை நாடுகள்!“2021-ன் சிறந்த டெஸ்ட் வீரர் விருது”.. தமிழக வீரர் இடம்பிடித்து அசத்தல்.. வியப்பில் அண்டை நாடுகள்!

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் எல்காரை ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் 11வது ஒவரில் பும்ராவுக்கு காலில் காயம் எற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெவிலியன் சென்றார்.இது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

விதிகள் அனுமதிக்காது

விதிகள் அனுமதிக்காது

ஆனால் முகமது ஷமி, சிராஜ், மற்றும் சர்துல் தாக்கூர் அபாரமாக பந்துவீசினர். இதில் குறிப்பாக முகமது ஷமி 5 விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேல் பெவிலியனில் ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் களத்திற்கு திரும்பினார். ஆனால், விதிப்படி ஒரு வீரர் எவ்வளவு நேரம் களத்தை விட்டு சென்றாரோ, அதே நேரம் வரை அவர் களத்திற்கு வந்தாலும் பந்துவீச முடியாது.

கோலி கிண்டல்

கோலி கிண்டல்

இந்த விதிப்படி பும்ரா வெறும் ஃபில்டிங் மட்டுமே செய்து கொண்டு இருந்தார். பிறகு 49 ஓவர் கழித்து பும்ரா பந்துவீச அனுமதிக்கப்பட்டார். அப்போது பும்ராவை பார்த்து சிங்கம் களமிறங்கிடுச்சி என்ற வடிவேலு வசனம் போல், பாறை திரும்பவும் பந்துவீச வந்துவிட்டது என்று கிண்டல் அடித்தார். இதன் பின்னர் பும்ரா பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார்

பும்ரா முக்கியம்

பும்ரா முக்கியம்

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம். இதனால் பும்ரா காயம் எற்பட்டதால் இந்திய வீரர்களும் கொஞ்சம் திகைத்து தான் போனார்கள். ஆனால் பும்ரா வந்ததும் நமது ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். பும்ராவுக்கு காயம் பெரியதளவில் இல்லை என்று இந்திய அணி மருத்துவக்குழு கூறியுள்ளது. எனினும் அவர் இரண்டாவது இன்னிங்சில் எப்படி பந்துவீசுகிறார் என்பதை பொருட்டு தான் இந்தியாவின் வெற்றி அமைந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 1st Test Virat kohli comments on bumrah returns to bowl பாறை திரும்பி வந்திடுச்சி.. இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை கிண்டல் செய்த கோலி
Story first published: Wednesday, December 29, 2021, 0:39 [IST]
Other articles published on Dec 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X