For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோசமாக பந்துவீசும் இந்திய அணி..!! ராகுல் டிராவிட்டுக்கு தலைவலி..!! அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பு..

பார்ல்: தென்னாப்பிரிக்க தொடருக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமாக பந்துவீசி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் குறைகள் தெரிந்தாலும், ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு பல் இளிக்கிறது.

முதல் போட்டியிலும், சரி 2வது போட்டியிலும் சரி.. இந்திய பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர்.

“எல்லாமே பொய்யா..!!” 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி.. ப்ளேயிங் 11ல் திருப்பம்! “எல்லாமே பொய்யா..!!” 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது இந்திய அணி.. ப்ளேயிங் 11ல் திருப்பம்!

வீணான வாய்ப்பு

வீணான வாய்ப்பு

இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் பெவுமா மற்றும் வெண்டர்டுசனுக்கு ரன்களை வாரி வழங்கினர். அவர்களது 200 ரன் பார்ட்னர்ஷிப்பை இந்திய வீரர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் 2வது போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கினார் ராகுல்.

புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார்

'ஆனால் இந்த வாய்ப்பையும் பந்துவீச்சாளர்கள் வீணடித்து வருகின்றனர். குறிப்பாக புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 40 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் எப்பா..சாமி நீ பந்தே வீச வேண்டாம் என்று சொல்விட்டார் ராகுல். பும்ராவை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தர முடியவில்லை.

பி.சி.சி.ஐ. அதிரடி

பி.சி.சி.ஐ. அதிரடி

ஸ்விங் மற்றும் வேகம் இரண்டையும் இழந்த புவனேஸ்வர் குமார், இனி இந்திய அணியில் இடம்பெறவதே சந்தேகம் தான். இதனால் பந்துவீச்சு இலாகாவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.. சிராஜ், ஆவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, ஹர்சல் பட்டேல், இஷான் போரேல், உம்ரான் மாலிக், தீபக் சாஹர் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணின் பங்களிப்பு தான். தற்போது அவர் இல்லாதது இந்திய அணிக்கு குறையாக பார்க்கப்படுகிறது. தற்போதைய பயிற்சியாளர் பாராஸ் மாம்பரேவின் செயல்பாடை ஒரே தொடரில் கணிப்பது தவறு. இதனால் தொடர்ந்து பந்துவீச்சில் சொதப்பி வரும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படலாம்.

Story first published: Friday, January 21, 2022, 22:58 [IST]
Other articles published on Jan 21, 2022
English summary
Ind vs SA 2nd odi India Bowlers Worst Performance. BCCI Plans to sack seniors மோசமாக பந்துவீசும் இந்திய அணி..!! ராகுல் டிராவிட்டுக்கு தலைவலி..!! அதிரடி மாற்றங்களுக்கு வாய்ப்பு..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X