For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் விக்கெட்டே தாறுமாறு! இந்திய அணியின் தூணை சாய்த்த நாகப்பட்டின தமிழர்.. தென்னாப்பிரிக்கா ஹேப்பி!

Recommended Video

IND VS SA 1st test | Senuran Muthusamy | தென்னாப்பிரிக்க அணியில் ஆடும் தமிழர் செனுரான் முத்துசாமி

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழர் செனுரான் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் போட்டி விக்கெட்டை வீழ்த்தினார்.

செனுரான் முத்துசாமியின் பூர்வீகம் நாகப்பட்டினம் ஆகும். அட.. நம்ம தமிழர் ஒருவர் தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று விட்டார் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டே இருக்கும் போது, இன்னொரு பெருமைப்படும் காரியம் ஒன்றை செய்தார்.

தப்பு பண்ணிட்டீங்களே! அஸ்வின் மாதிரி உஷாரா இருந்திருக்க வேண்டாமா? டெஸ்ட் மன்னனுக்கு நேர்ந்த கதி!தப்பு பண்ணிட்டீங்களே! அஸ்வின் மாதிரி உஷாரா இருந்திருக்க வேண்டாமா? டெஸ்ட் மன்னனுக்கு நேர்ந்த கதி!

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

தற்காலத்தின் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என அறியப்படும் விராட் கோலி தான் அவரது முதல் டெஸ்ட் விக்கெட். ஒரு அறிமுக வீரருக்கு இதை விட மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.

பயிற்சிப் போட்டியில் கலக்கல்

பயிற்சிப் போட்டியில் கலக்கல்

இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட முத்துசாமி பயிற்சிப் போட்டியில் தனக்கு கிடைத்த ஒரே ஒரு ஓவரில் விக்கெட் வீழ்த்தி தன் திறமையை நிரூபித்தார்.

முதல் டெஸ்ட் அறிமுகம்

முதல் டெஸ்ட் அறிமுகம்

அதை அடுத்து முதல் டெஸ்டில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைக்கலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணியில் செனுரான் முத்துசாமிக்கு வாய்ப்பு கிடைத்தது. பூர்வீக தமிழரான அவர், இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார்.

தென்னாப்பிரிக்கா தவிப்பு

தென்னாப்பிரிக்கா தவிப்பு

போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மோசமாக தடுமாறி வந்தது. ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் துவக்கக் ஜோடியை பிரிக்க முடியாமல் பந்துவீச்சில் திணறியது. அதே சமயம், முத்துசாமிக்கு அதிக ஓவர்கள் கிடைக்கவில்லை.

கோலி விக்கெட்

கோலி விக்கெட்

ரோஹித், புஜாரா ஆட்டமிழந்த பின் கோலி ஆடி வந்தார். இந்தியா ஏற்கனவே பெரிய இலக்கை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், கோலி களத்தில் இருந்தால் ஆபத்து என்ற நிலையில், அவரது விக்கெட்டை சாய்த்தார் முத்துசாமி.

எப்படி விக்கெட் எடுத்தார்?

எப்படி விக்கெட் எடுத்தார்?

கோலி 20 ரன்கள் எடுத்து இருந்த போது 104வது ஓவரை வீசினார் முத்துசாமி. அந்த ஓவரின் முதல் பந்தில் கோலி சற்று தடுமாறி, பந்தை அடித்தார். பந்து நேராக முத்துசாமியிடம் கேட்ச் ஆக வந்தது. தன் முதல் டெஸ்ட் விக்கெட் கோலி என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் அவர்.

தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சி

தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சி

தென்னாப்பிரிக்க அணியின் ஒவ்வொரு வீரரும் முத்துசாமியை பாராட்டினர். முக்கிய விக்கெட் வீழ்ந்தாலும், இந்தியா 502 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கலை உண்டாக்கியது. சரி, யார் இந்த செனுரான் முத்துசாமி?

யார் இந்த செனுரான் முத்துசாமி?

யார் இந்த செனுரான் முத்துசாமி?

செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்து, அங்கேயே வளர்ந்தவர். அவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம். அங்கே இன்னும் அவரது சொந்தங்கள் வாழ்வதாக கூறுகிறார்.

தமிழ் தெரியாது

தமிழ் தெரியாது

பல தலைமுறைகளுக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தது முத்துசாமியின் குடும்பம். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தமிழில் பேசினாலும், அவருக்கு தமிழில் பேசத் தெரியாது என்கிறார்.

Story first published: Thursday, October 3, 2019, 16:50 [IST]
Other articles published on Oct 3, 2019
English summary
IND vs SA : Senuran Muthusamy got Virat Kohli’s wicket as his first test wicket. His origin roots goes to Nagapattinam of Tamilnadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X