அட மேட்ச்சை விடுங்கப்பா.. ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா? வெடித்து சிரித்த ட்விட்டர்!

Ravi Shastri sleeping during IND vs SA match | ரவி சாஸ்திரி செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா?

ராஞ்சி : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதை காட்டிலும் பல ரசிகர்களை இணையத்தில் பேச வைத்தது ரவி சாஸ்திரி செய்த அந்த காரியம்.

ரவி சாஸ்திரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தது முதல் ரசிகர்களுக்கு அவரை பிடிப்பதில்லை.

அவரும் ஏதாவது ஏடாகூட காரியங்கள் செய்து ரசிகர்களிடம் இணையத்தில் மாட்டிக் கொள்கிறார். இந்த முறை என்ன செய்தார்?

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 0 என ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று மூன்றாவது போட்டிக்குள் அடி எடுத்து வைத்தது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இந்தப் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 497 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணியை 162 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து பாலோ ஆன் கொடுத்தது இந்தியா.

இந்தியா வெற்றி பெறும்

இந்தியா வெற்றி பெறும்

இரண்டாவது இன்னிங்க்ஸிலும் இந்தியா விரைவாக விக்கெட்களை அள்ளியது. எப்படியும் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அப்போது இந்திய அணியின் உடை மாற்றும் அறையை காட்டியது கேமரா.

தூங்கினார்

தூங்கினார்

அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்கார்ந்த வாக்கிலேயே தலையை சாய்த்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடையவில்லை. காரணம், இது ஒன்றும் முதல் முறையல்ல.

ரசிகர்கள் எண்ணம்

ரசிகர்கள் எண்ணம்

ரவி சாஸ்திரி தூங்கிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை வைத்து பலரும் கலாய்க்க துவங்கினர். அதில் பலருடைய எண்ணம், "இப்படி ஒரு வேலை எங்களுக்கும் கிடைக்காதா?" என்பதாகத்தான் இருந்தது.

10 கோடி

சுமார் 10 கோடி சம்பளம் வாங்கும் ரவி சாஸ்திரி பெரிய அளவில் பயிற்சி அளிப்பதும் இல்லை. போட்டி நடக்கும் போது நன்று தூங்குகிறார். சில சமயம் பாட்டிலும், கையுமாக காட்சி அளிக்கிறார் என்பதை குறிப்பிடுகிறார் இவர்.

8க்கு மேலே!

தென்னாப்பிரிக்கா 6 (விக்கெட்) போச்சு.. ரவி சாஸ்திரிக்கு 8க்கு மேலே போச்சு! நல்லா யோசிச்சா இவர் என்ன சொல்றாருன்னு உங்களுக்கே புரியும்.

சாதா கோச் இல்லை!

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லீப்பர் கோச் இவர் தானாம். ரவி சாஸ்திரி போட்டி நடக்கும் போது தூங்குவார் என்பதை, "இவர் சாதா கோச் இல்லை.. ஸ்லீப்பர் கோச்" என கூறுகிறார்.

தண்ணீர் குடித்தால்..

ரவி சாஸ்திரி தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தால் இது தான் நிலைமை என கலாய்த்துள்ளார் ஒருவர். ரோஹித் சர்மா கடந்த போட்டியின் போது ரசிகர் ஒருவரால் கீழே விழுந்தார் அப்போது சக வீரர்கள் அவரை தூக்கி விட்டனர். அதை வைத்து தான் கலாய்த்துள்ளார். அப்படி பாட்டில்ல என்னங்க இருக்கு?

சிறந்த வேலை

இது எந்த அரசாங்க வேலையையும் விட சிறந்தது. சாப்பிடுங்க.. தூங்குங்க.. வருஷத்துக்கு 10 கோடி சம்பளம் வாங்குங்க!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Twitter explodes in laughter as Ravi Shastri takes nap during match. Memes and jokes started spreading immediately.
Story first published: Wednesday, October 23, 2019, 11:16 [IST]
Other articles published on Oct 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X