For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்

மும்பை : இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் ஜோகிந்தர் சர்மா.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இவர் முதல் பந்தை ஓயிடாக போட்டும், அடுத்த பந்தை சிக்சருக்கு கொடுததார்.

4 பந்துகளுக்கு ஆறு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜோகிந்தர் சர்மா வீசிய பந்தை பின்புறமாக மிஸ்பா உன் ஹக் அடிக்க, அது ஸ்ரீசாந்திடம் பிடிப்பட்டார்.

“பும்ரா எங்கதான் சார் இருக்கார்?” கம்பேக் தேதியை அறிவித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் குழப்பம்- விவரம் “பும்ரா எங்கதான் சார் இருக்கார்?” கம்பேக் தேதியை அறிவித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் குழப்பம்- விவரம்

மறக்க முடியாத பரிசு

மறக்க முடியாத பரிசு

இதன் மூலம் இந்திய அணிக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்தார். கேடைசி ஓவரை தோனி ஹர்பஜனை தான் வீச சொன்னார். ஆனால் அவர் முடியாது என்று கூற, தைரியமாக வந்து ரிஸ்க் எடுத்தார் ஜோகிந்தர் சர்மா. தற்போது தனது 39 வது வயதில் சர்வதேச மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறார் .

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாக்கு எழுதியுள்ள ஜோகிந்தர் சர்மா எழுதியுள்ள கடிதத்தில் 2002-2017 வரை உள்ள ஆண்டுகள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயணம் என்று தெரிவித்துள்ளார். . இந்தியாவிற்காக விளையாடியது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று என்று குறிப்பிட்டுள்ள ஜோகிந்தர் சர்மா, , உங்கள் அனைவருடனும் இணைந்து விளையாடியது ஒரு பாக்கியம் என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

2004-2007 காலகட்டங்களில் இந்திய அணிக்காக 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஜோகிந்தர் சர்மா விளையாடி இருக்கிறார், ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் டி20 போட்டிகளில் 4 விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் . ஹரியானா அணிக்காக 77 உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 5 சதங்கள் மற்றும் 10 அரை சதங்களுடன் 2804 ரன்களை விளாசிய ஜோகிந்தர் சர்மா, 297 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

விபத்து

விபத்து

2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய அவர், கடைசி ஒரு நாள் போட்டியை 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடினார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஜோகிந்தர் சர்மா, 16 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பிறகு ரிஷப் பண்டை போல் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதன் பிறகு கிரிக்கெட்டே விளையாட முடியாத நிலை சென்றாலும், இவருடைய சாதனையை பாராட்டி ஹரியானா மாநில காவல் துறையில் டி எஸ் பி பதவி வழங்கி வருகிறார்.

Story first published: Friday, February 3, 2023, 21:48 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
India 2007 world cup hero joginder sharma announced retirement இவர நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X