ருத்துராஜ் கெய்க்வாட் சதம்.. வலுவான நிலையில் இந்திய ஏ அணி.. ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக்

பெங்களூரு : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏன் அணி நியூசிலாந்து வந்து பிச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அடேங்கப்பா.. டி20 உலககோப்பைக்கு இத்தனை டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதா? இந்தியா Vs பாக் ஹவுஸ்புஃல்அடேங்கப்பா.. டி20 உலககோப்பைக்கு இத்தனை டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதா? இந்தியா Vs பாக் ஹவுஸ்புஃல்

ருத்துராஜ் சதம்

ருத்துராஜ் சதம்

இருப்பினும் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 127 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ள அவர் 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார். ரஜட் பட்டிதார் 30 ரன்களும், உபேந்திரா யாதவ் 76 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி 293 ரன்கள் எடுத்தது.

உம்ரான் மாலிக் தாராளம்

உம்ரான் மாலிக் தாராளம்

இதனை அடுத்து நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.இதில் மார்க் சாப்மன் அதிகபட்சமாக 92 ரன்கள் எடுக்க சீன் சோலியா அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் துணை நிற்காததால் நியூசிலாந்து ஏணி 237 ரன்கள் ஆட்டம் இழந்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய ஏ அணிக்காக களம் இறங்கிய உம்ரான் மாலிக் 10 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார் .

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

ராகுல் சாகர் மூன்று விக்கெட்டுகளையும், சவுரப் குமார் நான்கு விக்கெட்களையும் முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.இதனை அடுத்து 56 ரன்கள் முன்னிலையுடன் இந்திய ஏ அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் 4 ரன்களில் வெளியேறினார்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

கேப்டன் பிரயாங் பஞ்சால் 17 ரன்களுடனும் ருத்துராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் உடனும் இரண்டாம் நாள் முடிவில் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி இரண்டாவது லிங்க்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India A vs NZ A 3rd unofficial test - Team India on the verge of taking huge lead ருத்துராஜ் கெய்க்வாட் சதம்.. வலுவான நிலையில் இந்திய ஏ அணி.. ரன்களை வாரி வழங்கிய உம்ரான் மாலிக்
Story first published: Friday, September 16, 2022, 21:22 [IST]
Other articles published on Sep 16, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X