For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. விஜய் சங்கருக்கு வாய்ப்பு? இதோ உத்தேச பட்டியல்

நாக்பூர்:இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்தியாவின் உத்தேச அணி எதுவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. நாக்பூரில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

 ஐபிஎல்-லுக்குள்ள உங்க மூக்கை நுழைக்க வேண்டாம்.. ஐசிசி-க்கு நோஸ்கட் கொடுத்த ஐபிஎல்-லுக்குள்ள உங்க மூக்கை நுழைக்க வேண்டாம்.. ஐசிசி-க்கு நோஸ்கட் கொடுத்த "பலவீன" பிசிசிஐ!

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

டி 20 தொடரில் ரோஹித் சர்மா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்பட வில்லை. இருந்த போதிலும் ஒருநாள் தொடரில் நிச்சயம் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார். ஆக அவர் அணியில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பல முக்கிய நேரங்களில் பொறுப்பின்றி ஆடி ரசிகர்களை வெறுப்பேற்றும் போக்கு அவரிடம் உள்ளது. அதை மாற்றி, ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான்.

விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை பற்றி சொல்லவே வேண்டாம். ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொடரின் மூலம் எத்தனை சாதனைகள் நிகழ்த்துவார் என்பது தெரியாது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு தீனி காத்திருக்கிறது என்பது தான் உண்மை.

கே.எல் ராகுல்

கே.எல் ராகுல்

டி 20 தொடரில் மாஸ் காட்டியவர். ஒருநாள் தொடரிலும் அதே போன்றதொரு சிறப்பாக செயல்பட்டால் அது இந்திய அணிக்கு பிளஸ்.

 அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்த வீரர்களுக்கு எளிதாக இருக்கும். அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

தோனி

தோனி

முன்னாள் கேப்டனான தல தோனியை பற்றி கூற வேண்டியதில்லை. இருப்பினும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ள அவர், தமது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இளம் வீரர் தான் இந்த விஜய் சங்கர். அவருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இவர் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், நாளைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என நம்பலாம். தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

முகமது சமி

முகமது சமி

சிறந்த பார்மில் இருக்கும் முகமது சமி, ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கான இடம் உறுதியாகும்.

சாஹல்

சாஹல்

டி 20 தொடரில் சொதப்பியவர் யுஸ்வேந்திர சாஹல். எனவே ஒருநாள் தொடரிலாவது தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். அது தான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஜஸ்ப்ரித் பும்ரா

ஜஸ்ப்ரித் பும்ரா

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் பும்ரா ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Monday, March 4, 2019, 13:57 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Auditions for the World Cup hopefuls will continue but India will also be aiming to produce another complete performance against Australia in the second ODI, Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X