For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஈரமான ஈடன் கார்டன். இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி வருண பகவான் கையில்

By Staff

கொல்கத்தா: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ஈரமாக இருந்தாலும், மழை நின்றால் போட்டி நடத்துவதற்கு தயாராக உள்ளது. அதனால் கோல்கட்டாவில் நாளை ரன் மழையா, வான்மழையா என்பது வருண பகவான் கையிலேயே உள்ளது.

5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வென்று, 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஆட்டம், கொல்கத்தாவில் நாளை நடக்க உள்ளது. முதல் போட்டியில், பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்துத் துறையிலும் நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறியபோதும், நடு வரிசையில் வந்த கேப்டன் கூல் டோணி, ஹார்திக் பாண்டியா ஆட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கூல் டோணி

கூல் டோணி

பந்து வீச்சில் பும்ரா, பாண்டியாவுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். கேப்டன் கூல் டோணி, ஸ்டம்புக்கு முன்னும் பின்னும் அபாரமாக விளையாடுவதுடன், தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வது, இந்திய அணிக்கு மிகப் பெரிய பிளஸ் பாயின்ட்.

ஆஸி. அணி

ஆஸி. அணி

ஆஸ்திரேலியா அணி வலுவான அணியாக இருந்தாலும், உள்நாட்டில் விளையாடுவது என்பது நமது அணிக்கு மிகப் பெரிய பலமாகும். மேலும் தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகள், எதிரில் யாராக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்ற தன்னம்பிக்கையுடன், இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

கொல்கத்தாவில் கனமழை

கொல்கத்தாவில் கனமழை

சென்னையில் நடந்த போட்டியின்போதும், மழை குறுக்கிட்டது. ஆனால், கொல்கத்தாவில் பெய்துவரும் கனமழையால், போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரமான மைதானம்

ஈரமான மைதானம்

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைவராக உள்ள பெங்கால் கிரிக்கெட் சங்கம், மைதானத்தை பாலிதீன் கவர்களால் மூடிவைத்துள்ளது. மழையால் மைதானம் சிறிது ஈரமாக இருந்தாலும், சில மணி நேர அவகாசம் கொடுத்தால், மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ப தயார்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளனர்.

ஜனவரியில்...

ஜனவரியில்...

இந்தாண்டு ஜனவரியில், இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு முன் மழை பெய்தது. அதன்பிறகு மைதானம் தயார் செய்யப்பட்டு, இரு அணிகளும் 300க்கு மேற்பட்ட ரன்களை அடித்தன.

மழையா? ரன் மழையா?

மழையா? ரன் மழையா?

தற்போதும் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டுக்குமே சாதகமாக அமைந்துள்ளது. மழை இல்லாமல் இருந்தால், மைதானத்தில் ரன் மழையை காணலாம். வருண பகவான் கையிலேயே நாளைய மேட்ச் உள்ளது

Story first published: Wednesday, September 20, 2017, 12:47 [IST]
Other articles published on Sep 20, 2017
English summary
India, Australia second ODI to be played in Eden Garden tomorrow, rain may play foul
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X