For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்வையற்றோர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வென்றது

By Staff

துபாய்: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா வென்றது.

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஒருதினப் போட்டி சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை அபாரமாக வென்றது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் கைவிடப்பட்டது.

India beats Pakistan


பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டமும் இந்தியாவிடமே உள்ளது. உலகக் கோப்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய வீரர்கள் வென்றனர்.

முதலில் ஆடிய பாகிஸ்தான், 40 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 282 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 34.5 ஓவர்களில் அந்த இலக்கை 3 விக்கெட்களை மட்டும் இழந்து எட்டியது. தீபக் மாலிக் 71 பந்துகளில், 79 ரன்கள் எடுத்தார். அதில், எட்டு பவுண்டரிகளும் அடங்கும். வெங்கடேஷ் 55 பந்துகளில், 64 ரன்களும், கேப்டன் அஜய் ரெட்டி, 34 பந்துகளில், 47 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தியா இன்று வங்கதேசத்தையும், நாளை நேபாளத்தையும் சந்திக்கிறது. இந்த உலகக் கோப்பையின் அரை இறுதி, 17ம் தேதியும், பைனல்ஸ், 21ம் தேதியும் நடக்கிறது.







Story first published: Saturday, January 13, 2018, 17:06 [IST]
Other articles published on Jan 13, 2018
English summary
Indian blind cricket team beat Pakistan in world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X