For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர்... 2020ம் ஆண்டு மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி... வாய்ப்பை தட்டிச் சென்ற இந்தியா

மியாமி:2020ம் ஆண்டு மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டின் உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பம் செய்திருந்தன.

இதுதொடர்பாக அமெரிக்காவின் மியாமியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

கேப்டன் பீல்டிங் நிக்கறதே சரியில்லை.. அப்புறம் எப்படி மத்தவங்களை சரியா பீல்டிங் நிற்க வைப்பார்? கேப்டன் பீல்டிங் நிக்கறதே சரியில்லை.. அப்புறம் எப்படி மத்தவங்களை சரியா பீல்டிங் நிற்க வைப்பார்?

உலக கோப்பை கால்பந்து

உலக கோப்பை கால்பந்து

அதனை பிபா தலைவர் கியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:2020ம் ஆண்டு உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியா நடத்துகிறது. அதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

சம்மேளனம் உறுதி

இதே அறிவிப்பை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உறுதி செய்து இருக்கிறது. இது குறித்து அதன் பொதுச்செயலாளர் குஷால் தாஸ் கூறியதாவது:

கூட்டமைப்புக்கு நன்றி

சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்திருக்கிறோம். இதன் மூலம், இந்தியாவின் மகளிர் கால்பந்து மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.

வாய்ப்பு கிடைத்துள்ளது

இந்தியாவில் பல்வேறு தருணங்களில் மகளிர் கால்பந்தை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே தான் உலக கோப்பை தொடர் நடத்துவதற்காக விண்ணப்பித்திருக்கிறோம். தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை இந்தியா நடத்தி இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக இது போன்ற வாய்ப்பை இந்தியா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 16, 2019, 11:23 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
India confirmed as hosts for 2020 fifa under 17 women’s world cup football.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X