இதை தாங்க எதிர்பார்த்தோம்! விரைவில் நட்பாகும் இந்தியா, பாக்.. முதல் படியை எடுத்து வைத்த மத்திய அரசு

மும்பை : பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசாவை மத்திய அரசு முதலில் நிராகரித்தது. இந்த நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தற்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் தொடங்கவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வருமா என்பது சந்தேகமாக இருந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பா.ஜ.க. அரசு விசா தராமல் நிராகரித்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இது இரு நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

“ ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்”.. வங்கதேசத்துடனான கிரிக்கெட் தொடர்.. சவால் குறித்து ரோகித் சர்மா பேச்சு! “ ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்”.. வங்கதேசத்துடனான கிரிக்கெட் தொடர்.. சவால் குறித்து ரோகித் சர்மா பேச்சு!

பாகிஸ்தான் கண்டனம்

பாகிஸ்தான் கண்டனம்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியை நிலைகுலைய வைத்துள்ளது. விளையாட்டை அரசியலுடன் இந்தியா கலக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்த வாரியம், இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

5 முறை வெற்றி

5 முறை வெற்றி

பார்வையற்றவர்களுக்கான டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி கடந்த 2 முறையும் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்தது. தற்போதைய பார்வையற்றவர்களுக்கான டி20 உலக சாம்பியனான இந்தியாவை கடைசியாக விளையாடிய ஐந்து முறை தொடர்ச்சியாக வீழ்த்தியதால், இந்த தொடரில் பாகிஸ்தான் முக்கியமான அணியாக கருதப்பட்டது. இதனால் விசா வழங்கப்படவில்லை என்ற செய்தி இரு நாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

மத்திய அரசுக்கு வரவேற்பு

மத்திய அரசுக்கு வரவேற்பு

இந்த நிலையில் , மத்திய அரசின் இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பார்வையற்ற வீரர்களிடம் நமது அரசியலை காட்ட கூடாது என்று அவர்கள் கூறினர் . இதனையடுத்து, மத்திய அரசு, உடனடியாக விசாவுக்கான அனுமதியை வழங்கியது. இரு நாட்டுக்கும் இடையே உள்ள அரசியல் காரணங்களால், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ அறிவித்தது.இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாகிஸ்தான், அப்படி இந்தியா விலகினால், நாங்கள் இந்தியாவில் நடைபெறும் உலககோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.

நல்ல முடிவு

நல்ல முடிவு

ஏற்கனவே இரு அணிகளும் இருத்தரப்பு தொடரில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது ஐசிசி தொடர்களிலும் மோதாமல் போகும் சூழல் உருவாகி உள்ளது. இது கிரிக்கெட்டுக்கு நல்லது அல்ல என்று பல்வேறு தரப்பு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது, இரு நாட்டுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும் விதமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Blind cricket t20 world cup - India rejected visa for Pakistan cricketers பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர்களுக்கு விசா மறுப்பு.. இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு
Story first published: Tuesday, December 6, 2022, 20:58 [IST]
Other articles published on Dec 6, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X