ஹாட்ரிக் தொடர் வெற்றிக்கு தயாராகும் இந்தியா!

Posted By: Staff

சென்னை: இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மிகப் பெரிய வெற்றி என்ற தெம்புடன், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா நாளை களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன், 5 ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களை இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. முதல் ஒருதினப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.

India Looking for Hat-Trick Victory

இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது போல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் மிகப் பெரிய அளவில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் பண்டிட்கள் கணித்துள்ளனர்.

இருந்தாலும் மிகவும் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டித் தொடர், இந்தியாவுக்கு சற்று கடினமாகவே இருக்கும்.

இரு அணிகளும் இதுவரை, 8 முறை ஒருதினப் போட்டித் தொடரில் விளையாடியுள்ளன. இன்று துவங்க உள்ளது, 9வது போட்டித் தொடராகும்.

இதுவரை நடந்துள்ள, எட்டுத் தொடர்களில், ஆஸ்திரேலியா, 5 முறையும், இந்தியா 3 முறையும் தொடரை வென்றுள்ளன. இதில், 7 முறை போட்டித் தொடர்கள் இந்தியாவில் நடந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா 4 முறையும், இந்தியா 3 முறையும் வென்றுள்ளன.

கடைசியாக, நம்நாட்டில் நடந்த 2010 மற்றும் 2013ல் நடந்த தொடர்களில் இந்தியாவே வென்றுள்ளது.

அதனால், தற்போது நடக்கும் தொடரில் வென்று, ஹாட்ரிக் சாதனைக்கு கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணி தயாராக உள்ளது.

இந்தியாவில் இரு அணிகளும் இதுவரை, 51 ஒருதினப் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில், ஆஸ்திரேலியா 25, இந்தியா, 21ல் வென்றுள்ளது. இந்தத் தொடரை, 5-0 என்று வென்றால், இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றுவிடும்.

இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில், இந்திய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். அதே நேரத்தில், ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் சற்று தடுமாறி வருகிறது.

உள்நாட்டில் புலிகள் என்ற பெயரும் இந்திய அணிக்கு உள்ளது. இந்தத் தொடரையும் ஒயிட்வாஷ் செய்வதற்கு, சென்னையில் நாளை நடக்கும் போட்டியில், வெற்றியுடன் துவக்க விராட் கோஹ்லி அணி தயாராக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தல டோணிக்கு, சேப்பாக்கம் மைதானம் சொந்த மைதானமாகவும், ராசியான மைதானமாகவும் உள்ளது.

அதனால், நாளை நடக்கும் போட்டியில், கடைசி வரை பரபரப்பு பஞ்சம் இருக்காது.

Story first published: Sunday, September 17, 2017, 17:09 [IST]
Other articles published on Sep 17, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற