For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC World Cup 2019:கிடைத்த வாய்ப்பில் கிடா வெட்டிய ராகுல்..! கழற்றி விடப்படும் விஜய் சங்கர்..??

கார்டிப்:உலக கோப்பை தொடரில், 4வது வீரராக யாரை களம் இறக்கலாம் என்ற இந்திய அணியின் அகில உலக பிரச்சனைக்கு நேற்று தீர்வு கிடைத்திருக்கிறது. ராகுலின் சதத்தால் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படுகிறார் விஜய் சங்கர்.

4ம் இடத்தில் அவரை இறக்கலாம்... இல்லை இவர் தான் சரியானவர் என்று அகில உலக பிரச்சனையாக இந்திய அணி நிர்வாகம் சித்தரித்து வந்த விவகாரத்துக்கு விடை கிடைத்து விட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டு காலமாக பேசப்பட்து வந்த பிரச்னை இது.

இந்திய அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் என முக்கோண வடிவத்தில் முற்றுப் பெறாத விவகாரமாக தொடர்ந்த இந்த பிரச்னை ராகுலால் முடிவுக்கு வந்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சரியான தருணத்தில் சதம் அடித்து தம்மை நிரூபித்து இருக்கிறார் கேஎல் ராகுல்.

மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு.. இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி ஜெர்ஸி.. யார் கொடுத்த ஐடியா? மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு.. இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி ஜெர்ஸி.. யார் கொடுத்த ஐடியா?

தவித்த நேரத்தில் சதம்

தவித்த நேரத்தில் சதம்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் 4ம் வீரராக தான் களம் இறங்கினார். சதம் தான் அடித்தார் என்று அதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. எந்த தருணத்தில் அடித்தார் என்று பார்க்க வேண்டும். அதாவது.. இந்தியா 83 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த தவித்திருந்த தருணம்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அப்போது தான் களம் இறங்கினார். தடுப்பாட்டம் ஆடாமல், அதிரடியாக ஆடியது தான் பிளஸ் பாயிண்ட். அது தான் அவரை நிலை நிறுத்தி இருக்கிறது.. இங்கிலாந்து போன்ற மண்ணில் இது போன்ற பேட்ஸ்மென் தான் 4வது இடத்துக்கு நமக்கு தேவை. தெளிவான, தன்னம்பிக்கையும் களத்தில் விளையாடிய ராகுலின் பேட்டிங் சிறப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

பார்ட்னர்ஷிப் 164 ரன்கள்

பார்ட்னர்ஷிப் 164 ரன்கள்

ஏன் என்றால்.. இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்க்க, முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 என்ற வலுவான ரன்களை குவித்தது. 4வது இடத்துக்கு இவர் தான் பிரதான வீரர் என்று அறிவிக்கப்பட்ட விஜய் சங்கர் எடுத்ததோ வெறும் 2 ரன்கள்தான்.

பவுலிங்கிலும் சொதப்பல்

பவுலிங்கிலும் சொதப்பல்

பேட்டிங்கில் சொதப்பிய அவர், பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. எனவே, இனி வரக் கூடிய உலக கோப்பை போட்டிகளில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது என்று கூறலாம். கிடைத்த வாய்ப்பில் சதம் அடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ராகுல் என்றே சொல்லலாம்.

4ம் இடத்துக்கு சரியான நபர்

4ம் இடத்துக்கு சரியான நபர்

ஒரே ஒரு போட்டியை வைத்து அந்த இடத்துக்கு ராகுல் தான் சரியான நபர் என்று கூற முடியாது. ஆனால், தற்போதைய நிலையில் ராகுலின் ‘பார்ம்' கேப்டன் கோலிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் ஆறுதல் அளிக்கக் கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் 4வது இடத்துக்கு சரியான நபர் கிடைத்துவிட்டார். விஜய்சங்கர் கழற்றி விடப்படுவார் என்பது தான் கிரிக்கெட் திறனாய்வாளர்களின் ஏகோபித்த கருத்து.

Story first published: Wednesday, May 29, 2019, 13:03 [IST]
Other articles published on May 29, 2019
English summary
India may decide to select rahul in 4th place in world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X