இந்தியாவின் தோல்வியால், நேபாளத்துக்கு வாய்ப்பு

Posted By: Staff

கோலாலம்பூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்திய அணியின் கோச் ராகுல் திராவிட் பாராட்டிய நேபாளம், முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்ற இந்திய அணிதான் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் லீக் ஆட்டத்தில் மலேசியாவை வென்ற இந்திய அணிக்கு, இரண்டாவது லீக் போட்டியில் நேபாளம் அதிர்ச்சி கொடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நேபாளம் அசத்தியது.

நேபாளம் இதுவரை வென்றதில்லை

நேபாளம் இதுவரை வென்றதில்லை

கிரிக்கெட்டில், எந்த வயதுப் பிரிவிலும், இந்தியாவை நேபாளம் இதுவரை இந்தியாவை நேபாளம் இதுவரை வென்றதில்லைவென்றதில்லை. இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் கோச் ராகுல் திராவிட், நேபாளம் அணியினர் உள்ள பகுதிக்குச் சென்று, அந்த அணியின் கோச் பினோத் குமார் தாசுக்கு வாழ்த்து கூறினார். திராவிடின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்தியாவை வென்றது வங்கதேசம்

இந்தியாவை வென்றது வங்கதேசம்

இந்த நிலையில், நேற்று மூன்றாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்த இந்தியா, 8 விகெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு, 187 ரன்கள் எடுத்தது. வங்கதேசம், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 191 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தியாவால் நேபாளத்துக்கு வாய்ப்பு

இந்தியாவால் நேபாளத்துக்கு வாய்ப்பு

இதன் மூலம் ஏ பிரிவில் அதிகப் புள்ளிகள் எடுத்து வங்கதேசம் அரை இறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் வென்றது. இந்தியா தோல்வியடைந்தததால், நேபாளத்துக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரைஇறுதிதியில் மோதுவது யார்?

அரைஇறுதிதியில் மோதுவது யார்?

பி பிரிவில் இருந்து பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. அரை இறுதியில் நேபாளம் - ஆப்கானிஸ்தான், வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Story first published: Wednesday, November 15, 2017, 15:20 [IST]
Other articles published on Nov 15, 2017
Please Wait while comments are loading...