For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சி ஆட்டம் டிரா.... தவறுகளை சுட்டிக் காட்டியது.... இந்திய அணி முழிக்குமா!

இங்கிலாந்து கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான இந்தியாவின் பயிற்சி ஆட்டம் டிராவானது. டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய அணி செய்ய வேண்டிய திருத்தங்கள் இந்த ஆட்டம் சுட்டிக் காட்டியுள்ளது.

செல்ம்ஸ்போர்ட்: இங்கிலாந்து கவுண்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தது. இருந்தாலும், அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் தொடரை சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்திய அணியை சிந்திக்க வைத்துள்ளது இந்த பயிற்சி ஆட்டம்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 போட்டித் தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் எசக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடியது.

மூன்று நாட்கள் நடந்த இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தது. எசக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. ஆட்டம் டிராவில் முடிந்தது.

தவறுகளை திருத்த வாய்ப்பு

தவறுகளை திருத்த வாய்ப்பு

அடுத்து நடைபெற உள்ள டெஸ்ட் தொடரை எப்படி சந்திக்க வேண்டும், அதற்கு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று இந்திய அணியை சிந்திக்க வைத்துள்ளது இந்த பயிற்சி ஆட்டம். குறிப்பாக துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இரண்டு இன்னிங்சிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய்க்கு பதிலாக லோகேஷ் ராகுல் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அவர் 36 ரன்கள் எடுத்து, தான் எந்த நிலையிலும் விளையாடத் தயார் என்பதை உணர்த்தியுள்ளார்.

பேட்டிங் பரவாயில்லை

பேட்டிங் பரவாயில்லை

மூன்றாவது வீரராக சத்தேஸ்வர் புஜாரா முன்னேற்றம் அடைந்துள்ளார். அஜங்யா ரஹானே நான்காவது வீரருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது. விராட் கோஹ்லி, பாண்டயா என அடுத்தக்கட்ட அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளன.

பந்து வீசினார் அஸ்வின்

பந்து வீசினார் அஸ்வின்

கடைசி நாளான நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீசினார். காயம் அடைந்த அவர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். இந்திய அணியின் பலமே, சுழற்பந்து வீச்சுதான். ஆனால், பயிற்சி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

அணியில் யார் யார்

அணியில் யார் யார்

பேட்டிங்கில் முதல் வரிசை வீரர்கள், குறிப்பாக துவக்க ஆட்டக்காரர் தவான் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டும் என, இந்திய அணிக்கு பல்வேறு சிந்தனைகளை இந்த பயிற்சி ஆட்டம் தூண்டிவிட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் 11 பேரில் யார் யாரை சேர்ப்பது என்பது விராட் கோஹ்லிக்கு நிச்சயம் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

Story first published: Saturday, July 28, 2018, 11:10 [IST]
Other articles published on Jul 28, 2018
English summary
Practice match against essex ended in draw.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X