186 ரன்களில் சுருண்ட இந்தியா.. சீனியர் வீரர்கள் ஏமாற்றம்.. கேஎல் ராகுல் தனி ஆளாக போராட்டம்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 41.2வது ஓவரில் 186 ரன்களில் சுருண்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் ஆனார்.

இதே போன்று அறிமுக வீரராக குல்தீப் சென் களமிறங்கினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 4 ஆல்ரவுண்டர்களை சேர்த்தது.

இரட்டை சதம் விளாசி ருத்துராஜ் கலக்கல்.. இந்திய அணியில் இடம் கிடைக்காது - அஸ்வின் சொன்ன பகீர் காரணம் இரட்டை சதம் விளாசி ருத்துராஜ் கலக்கல்.. இந்திய அணியில் இடம் கிடைக்காது - அஸ்வின் சொன்ன பகீர் காரணம்

தவான் ஏமாற்றம்

தவான் ஏமாற்றம்

தொடக்க வீரராக களமிறங்கிய தவான், ரோகித் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 17 பந்துகளை எதிர் கொண்ட ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் அதிரடியாக விளையாட முயற்பட்ட ரோகித் சர்மா, 31 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் சேர்த்தார்.

விராட் கோலி

விராட் கோலி

இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர்கள் அடங்கும். அதே ஓவரில் விராட் கோலி 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 ஸ்ரேயாஸ் குறை

ஸ்ரேயாஸ் குறை

ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். எனினும் 24 ரன்கள் எடுத்திருந்த போது அவருடைய குறையான ஷாட் பாலை அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.இந்திய அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இதனையடுத்து கேஎல் ராகுல் நடுவரிசையில் அரணாக இருந்து ரன்களை சேர்த்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.

ராகுல் அபாரம்

ராகுல் அபாரம்

இதனையடுத்து 70 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர்கள் என நம்பி அணியில் சேர்க்கப்பட்ட தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 41.2 வது ஓவரில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிபுல் ஹசன் 5 விக்கெட்டுகளையும், எபதாட் ஹூசைன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India set 187 runs as target for bangladesh 186 ரன்களில் சுருண்ட இந்தியா.. சீனியர் வீரர்கள் ஏமாற்றம்.. கேஎல் ராகுல் தனி ஆளாக போராட்டம்
Story first published: Sunday, December 4, 2022, 15:21 [IST]
Other articles published on Dec 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X