சென்னை ஒருநாள் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Posted By:

சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 26 ரன்களில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20-ஓவர் போட்டிகளில் விளையாடுதவற்காக இந்தியா வருகை தந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக இன்று நடைபெறுகிறது.

இலங்கையை பந்தாடியது

இலங்கையை பந்தாடியது

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்று வாகை சூடியிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெல்ல ஆவலுடன் இருக்கிறது இந்திய அணி.

தவான் இல்லை

தவான் இல்லை

ஆஸ்திரேலிய அணி வலிமையான அணி என்பதால் இந்திய அணி வீரர்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. இன்றைய போட்டியில் தவானுக்கு பதிலாக தொடக்க வீரராக ரஹானே அல்லது ராகுல் களம் இறக்கப்படுகிறார்.

சென்னையை மிரட்டும் மழை

சென்னையை மிரட்டும் மழை

இதனிடையே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. மிரட்டும் மழைக்கு நடுவே ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

பேட்டிங்

பேட்டிங்

இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி தடுமாற்றம்

இந்திய அணி தடுமாற்றம்

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். 23.1 ஓவரில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது இந்திய அணி.

ஹர்திக்- டோணி ஜோடி

ஹர்திக்- டோணி ஜோடி

பின்னர் களத்துக்கு வந்த ஹர்திக் பாண்ட்யா, டோணி ஜோடியை இந்திய அணியை சரிவில் இருந்து மெல்ல மீட்டது. பாண்ட்யா 83 ரன்களையும் டோணி 79 ரன்களையும் எடுத்தனர்.

282 ரன்கள் இலக்கு

282 ரன்கள் இலக்கு

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி வெல்ல 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 164 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

பின்னர் களத்துக்கு வந்த ஆஸ்திரேலி அணி வீரர்கள் 10 ஓவர்கள் வரை தாக்கு பிடித்தனர். ஆனால் அதன் பின்னர் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 21-வது ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்களைத்தான் ஆஸ்திரேலியா எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Story first published: Sunday, September 17, 2017, 11:29 [IST]
Other articles published on Sep 17, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற