பும்ரா! அந்த 9வது ஓவரை இப்படி பண்ணிட்டீங்களே! இருந்தாலும் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை!

டெல்லி: பும்ரா ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அசத்தலாக பந்து வீசினார். மிகக் குறைந்த அளவு ரன்களே கொடுத்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் ஒரே ஒரு ஓவரில் மட்டும் 19 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். மேலும், இதுவே, கடைசி நேர ஓவர்களில் பும்ரா அதிக ரன்கள் கொடுத்த ஓவர் என்ற பதிவையும் ஏற்படுத்தியது.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். துவக்கம் முதல் எட்டு ஓவர்கள் வரை பும்ரா ஓவருக்கு 1, 2, 3 என மிக மிக குறைந்த ரன்களே கொடுத்து வந்தார்.

13 ரன்கள் மட்டுமே!

13 ரன்கள் மட்டுமே!

முதல் எட்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் பும்ரா. கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கூடுதல் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில், 48வது ஓவரை பும்ரா வீசினார்.

ஹாட்ரிக் ஃபோர்

ஹாட்ரிக் ஃபோர்

அந்த ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் ஹாட்ரிக் ஃபோர் அடித்து பட்டையைக் கிளப்பினார். பாட கம்மின்ஸ் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார். இது தவிர்த்து இரண்டு பந்துகளில் ஒற்றை ரன்கள் ஓடி 3 ரன்கள் கிடைத்தது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

48 வது ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார் பும்ரா. அடுத்து 50வது ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும், 48வது ஓவர் பும்ராவின் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையாக பதிவானது.

டாட் பால்கள்

டாட் பால்கள்

எனினும், அந்த ஒரு ஓவருக்காக பும்ரா மோசமாக வீசினார் என கூறி விட முடியாது. 10 ஓவர் முடிவில் பும்ரா 39 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். தான் வீசிய 60 பந்துகளில் மொத்தம் 40 டாட் பால் வீசினார் என்பது ஆச்சரியம் அளிக்கும் பதிவாகும்.

ஆச்சரியமும், அதிர்ச்சியும்

ஆச்சரியமும், அதிர்ச்சியும்

ஐந்தாவது போட்டியில் பும்ரா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 4.50 ரன்களுக்கு மேல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே போட்டியில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளித்துள்ளார் ஒருநாள் போட்டியின் நம்பர் 1 பந்துவீச்சாளர் பும்ரா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs Australia 5th ODI : Bumrah worst death over ever with 19 runs
Story first published: Wednesday, March 13, 2019, 20:01 [IST]
Other articles published on Mar 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X