For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா வெற்றி பெற்ற போது கண்கலங்கிய கவாஸ்கர்.. நேர்ல பார்க்க முடியாம போச்சே!!

மும்பை : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி எந்த ஆசிய அணியாலும் இதுவரை செய்ய முடியாத சாதனையை செய்து காட்டியது.

அந்த வெற்றித் தருணத்தில் முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கண் கலங்கியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் பெயரில் நடத்தப்படும் இந்த டெஸ்ட் தொடரின் கோப்பை பரிசளிப்பு விழாவில் தன்னால் பங்கேற்க முடியவில்லையே என வருத்தமும் அடைந்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் ட்ராபி

பார்டர் - கவாஸ்கர் ட்ராபி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பார்டர் - கவாஸ்கர் ட்ராபி என்ற பெயரில் இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

71 ஆண்டுகள் கழித்து சாதனை

71 ஆண்டுகள் கழித்து சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்காத இந்தியா, முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றும் தொடரை கைப்பற்றாத குறையை போக்கியது கோலி தலைமையிலான இந்திய அணி.

கண் கலங்கிய கவாஸ்கர்

கண் கலங்கிய கவாஸ்கர்

இந்த சாதனை தருணத்தில் கண் கலங்கியுள்ளார் கவாஸ்கர். அவருக்கு முன்பிருந்த காலம் தொட்டு டெஸ்ட் தொடர்களை வெல்ல முடியாத ஒரு நாட்டில், தற்போதைய இளம் இந்திய அணி வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

வருத்தம் அடைந்த கவாஸ்கர்

வருத்தம் அடைந்த கவாஸ்கர்

இந்த வரலாற்று சாதனை வெற்றியை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்த கவாஸ்கர், இந்த தருணத்தை நேரில் காண முடியவில்லையே என்ற தன் வருத்தத்தையும் கூறியுள்ளார். அதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் செய்த குழப்பம் தான் காரணம்.

மே மாதம் வந்த ஈமெயில்

மே மாதம் வந்த ஈமெயில்

இதன் பரிசளிப்பு விழாவில் ஆலன் பார்டர் மற்றும் கவாஸ்கர் பங்கேற்பது வழக்கம். ஆஸ்திரேலியாவில் இந்த முறை நடைபெற்ற தொடரில் கவாஸ்கர் கலந்து கொள்ள வேண்டி ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு மே மாதத்தில் ஈமெயில் அனுப்பி இருந்தது.

வாய்ப்பு ஏற்படவில்லை

வாய்ப்பு ஏற்படவில்லை

எனினும், அதன் பின் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களால் கவாஸ்கரின் அழைப்பபை பின் தொடராமல் விட்டு விட்டது அந்த நிர்வாகம். அதனால், கவாஸ்கர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. கவாஸ்கர் மும்பையில் இருந்து கொண்டு, இந்த தொடரின் இந்திய ஒளிபரப்பில் வர்ணனை செய்து வருகிறார்.

Story first published: Tuesday, January 8, 2019, 16:14 [IST]
Other articles published on Jan 8, 2019
English summary
India vs Australia : Gavaskar had tear in his eyes when India lift the Border - Gavaskar trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X