பந்து பேட்ல படவே இல்லை.. ஆனா ஹனுமா விஹாரிக்கு அவுட் கொடுத்த 3வது அம்பயர்.. என்ன தான் நடந்தது?

ஹனுமா விஹாரி விக்கெட்.. என்ன தான் நடந்தது?- வீடியோ

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் ஹனுமா விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததாக கூறப்பட்டாலும் பந்து பேட்டிலேயே படவில்லை. எனினும், அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஹனுமா விஹாரி, புஜாரா

ஹனுமா விஹாரி, புஜாரா

நான்காவது டெஸ்டின் முதல் நாள் இந்தியா 303 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. இரண்டாம் நாள் போட்டியை ஹனுமா விஹாரி, புஜாரா தொடர்ந்தனர். இருவரும் நிலையாக ஆடி வந்தனர்.

அவுட் கேட்ட ஆஸி.

அவுட் கேட்ட ஆஸி.

102வது ஓவரில் நாதன் லியோன் வீசிய பந்தை ஹனுமா ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது முட்டிக்கு மேல்பகுதி கையில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. லியோன் மற்றும் ஆஸி. வீரர்கள் பந்து பேட்டில் பட்டதாக நினைத்து அவுட் கேட்டனர்.

மூன்றாவது அம்பயர் முடிவு

மூன்றாவது அம்பயர் முடிவு

களத்தில் இருந்த அம்பயர் உடனடியாக அவுட் கொடுத்து விட்டார். ஹனுமா விஹாரி பந்து கையில் மட்டுமே பட்டது என்பதில் உறுதியாக இருந்ததால், டி.ஆர்.எஸ் ரிவ்யூ கேட்டார். மூன்றாவது அம்பயர் ஸ்னிக்கோ மீட்டர் மூலம் பந்து பேட்டில் படுகிறதா என பார்வையிட்டார்.

ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு

ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு

பந்து, பேட்டை கடக்கையில் ஸ்னிக்கோ மீட்டரில் அதிர்வு தெரிந்தது. அதையடுத்து மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். எனினும், பந்துக்கும், பேட்டுக்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தது தெளிவாக தெரிந்தது. பந்தின் நிழல் பேட்டில் முழுவதுமாக விழுவது கூட தெரிந்தது.

ஹாட்ஸ்பாட் பார்க்கவில்லை

ஹாட்ஸ்பாட் பார்க்கவில்லை

இது எதையும் மூன்றாவது அம்பயர் எராஸ்மஸ் கண்டு கொள்ளவில்லை. பந்துக்கும், பேட்டுக்கும் இடைவெளி உள்ளதா என பார்க்க ஹாட்ஸ்பாட் முறை உள்ளது. அதை அம்பயர் ஒருமுறை சரி பார்த்திருக்கலாம். எனினும், ஸ்னிக்கோ மீட்டரை மட்டுமே வைத்து அவுட் கொடுத்து விட்டார் அம்பயர்.

இது தவறான முடிவு

இது தவறான முடிவு

தொலைக்காட்சி ஒளிபரப்பில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் மைக்கேல் கிளார்க் மற்றும் ஹஸ்ஸியும் இது தவறான முடிவு என கூறினர். ஹனுமா விஹாரி பந்தை அடிக்கவே இல்லை என கூறினார்கள்.

வேறு சப்தம்

வேறு சப்தம்

ஸ்னிக்கோ மீட்டரில் சப்தம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அம்பயர் பார்த்த போது வந்த அதிர்வு வேறு ஏதேனும் சப்தம் காரணமாக கூட இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹனுமாவின் ஷூ தரையில் உரசுவது அல்லது அவரது பேடில் கை உரசுவது போன்ற சப்தங்களால் கூட இந்த அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம்.

இந்தியா 622 ரன்கள்

இந்தியா 622 ரன்கள்

ஹனுமா விஹாரிக்கு இன்று ராசியில்லை என்றாலும், புஜாரா 193, ரிஷப் பண்ட் 159*, ஜடேஜா 81 என ரன் மழை பொழிந்தனர். இந்தியா 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்தியாவுக்கு இந்த போட்டியில் வெற்றி உறுதி என்றே தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia : Hanuma Vihari Controversial dismissal at Sydney test. Clarke and Hussey disagreed with third umpire decision.
Story first published: Friday, January 4, 2019, 12:18 [IST]
Other articles published on Jan 4, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X