For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது.. புஜாரா அடுத்த டிராவிட்டா? சண்டைக்கு வரும் டிராவிட் ரசிகர்கள்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் புஜாரா அடித்த சதம் மற்றும் அரைசதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.

வெற்றிக்கு காரணமான புஜாராவை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்.

இதில் சிலர் புஜாரா அடுத்த டிராவிட் எனவும் கூறுகிறார்கள். அப்படி கூறுபவர்களிடம் டிராவிட் ரசிகர்கள் இணையத்தில் மல்லுகட்டி வருகிறார்கள்.

அடிலெய்டு டெஸ்ட் வெற்றிகள்

டிராவிட் - புஜாரா ஒப்பீடுகள் அதிகரிக்க என்ன காரணம்? வரிசையாக காரணங்களை பார்க்கலாம். 2003இல் கங்குலி தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டிராவிட் முதல் இன்னிங்க்ஸில் 233 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 72 ரன்களும் எடுத்தார். 2018இல் புஜாரா அதே அடிலெய்டில் முதல் இன்னிங்க்ஸில் 123 மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 71 ரன்களும் எடுத்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

3வது இடத்தில் பேட்டிங்

3வது இடத்தில் பேட்டிங்

டிராவிட், புஜாரா இரண்டு வீரர்களுமே டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் இடத்தில் தான் பேட்டிங் செய்தனர். இரண்டு பேருமே இந்த மூன்றாம் இடத்தில் களமிறங்கி விக்கெட் விழாமல், பாதுகாத்து ரன் குவிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஒரே மாதிரி ஸ்ட்ரைக் ரேட்

ஒரே மாதிரி ஸ்ட்ரைக் ரேட்

இருவருக்குமே ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவு தான். டிராவிட் காலத்தில் அதை பற்றி யாரும் கவலைப்பட்டதில்லை. ஆனால், புஜாராவுக்கு விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. இந்த காலத்தில் டெஸ்ட் போட்டியில் கூட டி20 போல ஆடும் வீரர்கள் இருப்பதால் இந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், புஜாரா இதற்கெல்லாம் அசராமல், டிராவிட் போல நிறுத்தி நிதானமாகவே ஆடி வருகிறார்.

மல்லுகட்டும் ரசிகர்கள்

இந்த ஒப்பீடுகளை டிராவிட் ரசிகர்கள் விரும்பவில்லை. சிலர், "டிராவிட் புலி, புஜாரா புலிக்குட்டி, இல்லை.. இல்லை.. பூனைக் குட்டி" என கலாய்த்து வருகிறார்கள். எந்த காரணமாக இருந்தாலும் டிராவிட்டுடன் ஒப்பிட வேண்டாம் என சிலர் கூறுவதையும் பார்க்க முடிகிறது. சிலர் டிராவிட் இந்தியாவின் தடுப்புச் சுவர், புஜாரா அதில் கவசம் மட்டுமே எனவும் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, December 11, 2018, 15:13 [IST]
Other articles published on Dec 11, 2018
English summary
India vs Australia : People started saying Pujara is next dravid after Adilaide test victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X