For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், டிராவிட் செய்ய முடியாததை புஜாரா செய்கிறார்.. ஆஸி. கோச் எதை சொல்றாரு?

சிட்னி: இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா பந்தின் மீது கவனம் செலுத்துவது போல வேறு எந்த வீரரும் கவனம் செலுத்தி தான் பார்த்ததில்லை என கூறியுள்ளார் ஆஸி,. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் புஜாரா அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்ந்தார். அவரை வீழ்த்த முடியாமல் திணறினர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். இந்த நிலையில், புஜாராவை பற்றி பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

புஜாராவின் பேட்டிங்

புஜாராவின் பேட்டிங்

புஜாரா ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்தார். 7 இன்னிங்க்ஸ்களில் 521 ரன்கள் அடித்தார் புஜாரா. இதில் மூன்று சதங்களும் அடங்கும். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக பந்துகள் சந்தித்த இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பந்தில் கவனம்

பந்தில் கவனம்

புஜாராவின் இந்த வெற்றிக்கு காரணம் பந்தின் மீது அவருக்கு இருக்கும் அசாத்தியமான கவனம் தான் என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர். இந்த விஷயத்தில் புஜாராவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என கூறி இருக்கிறார்.

பந்தின் மீது கவனம்

பந்தின் மீது கவனம்

லாங்கர் கூறுகையில், "எந்த பேட்ஸ்மேனும் இவரை (புஜாரா) போல பந்தை நெருக்கமாக கவனித்து நான் பார்த்ததில்லை. சச்சின், டிராவிட் உட்பட. அவரது கவனம் ஒரு சவால். நாங்களும் அவரைப் போல முன்னேற வேண்டும்" என தெரிவித்தார்.

ஓய்வு ஏன்?

ஓய்வு ஏன்?

இந்தியா அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது பற்றி கூறினார் லாங்கர்.

பணிச்சுமை குறைப்பு

பணிச்சுமை குறைப்பு

மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பந்துவீசிய வேகப் பந்துவீச்சாளர்கள் சோர்ந்து போய் உள்ளதால், அவர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புஜாரா என்ன செய்வார்?

புஜாரா என்ன செய்வார்?

மறுபுறம் புஜாரா, இனி உலகக்கோப்பை வரை டெஸ்ட் போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில் ரஞ்சி தொடர் மற்றும் கவுன்டி தொடர்களில் ஆட உள்ளதாக கூறி உள்ளார். டெஸ்ட் வீரராக அறியப்படும் அவரை சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 10, 2019, 19:51 [IST]
Other articles published on Jan 10, 2019
English summary
India vs Australia : Pujara has more concentration on ball than Sachin and Dravid says Aussie coach Justin Langer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X