For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் வயசுல நாம என்ன பண்ணிட்டு இருந்தோம்னு யோசிச்சு பாருங்க.. ரிஷப் பண்ட்டுக்கு நடிகர் ஆதரவு!

டெல்லி : இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நான்காவது போட்டியில் ஆடிய ரிஷப் பண்ட் சில தவறுகள் செய்தார். அது போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும், ரசிகர்கள் ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். சமூக வலைதளங்களில் பலர் ரிஷப் பண்ட்டை வறுத்தெடுத்தனர்.

India vs Australia 5th ODI: யாருக்கு வெற்றி? டெல்லி பெரோஷா கோட்லா மைதான சாதனை வரலாறு India vs Australia 5th ODI: யாருக்கு வெற்றி? டெல்லி பெரோஷா கோட்லா மைதான சாதனை வரலாறு

ரிஷப் பண்ட்டுக்கு அழுத்தம்

ரிஷப் பண்ட்டுக்கு அழுத்தம்

போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, ரிஷப் பண்ட் தவறு செய்த போதெல்லாம் மொஹாலி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "தோனி, தோனி" என முழக்கமிட்டு ரிஷப் பண்ட்டுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தனர்.

ஆதரவு

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தன் ஆதரவை தெரிவித்து, அவருக்கு சற்று வாய்ப்பு கொடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வயதில்..

அவர் வயதில்..

அவர் தன் பதிவில், ரிஷப் பண்ட்டுக்கு 21 வயது தான் ஆகிறது. இந்திய அணிக்காக 3 வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகிறார். அவர் வயதில் நாம் என்ன செய்தோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கீப்பிங்கில் முன்னேற்றம்

கீப்பிங்கில் முன்னேற்றம்

மேலும், "ரிஷப் பண்ட், நீங்கள் சுத்தமான திறமை கொண்டவர்" என கூறியுள்ளார். ரிஷப் பண்ட் பேட்டிங்கில் திறமை வாய்ந்தவர் அதே போல, சர்வதேச போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் முன்னேறி வருகிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரைக் காட்டிலும் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.

வெற்றியை பாதித்தது

வெற்றியை பாதித்தது

எனினும், மொஹாலி ஒருநாள் போட்டியில் அழுத்தம் காரணமாகக் கூட ரிஷப் பண்ட் தடுமாறி இருக்கலாம். எனினும், அவரது தடுமாற்றம் அணியின் வெற்றியை பாதித்து விட்டது என்பதே உண்மை.

பரிசோதனை முயற்சி

பரிசோதனை முயற்சி

ஆஸ்திரேலிய தொடரில் உலகக்கோப்பைக்கு முந்தைய பரிசோதனை முயற்சியாகவே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியில் அழுத்தம் இல்லாமல் பண்ட் சிறப்பாக கீப்பிங் செய்ய வேண்டும் என்பதே இப்போதைய நிலை.

Story first published: Tuesday, March 12, 2019, 17:32 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
India vs Australia : Sunil Shetty supports Rishabh Pant after strong criticism
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X